சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரும்பாலை அமைக்க வேண்டாம் :விவசாயிகள் கடும் எதிர்ப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால், இரும்பு ஆலை அமைய அனுமதிக்க கூடாதென, தாராபுரம் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தாராபுரம் தாலுகா, வடுகபாளையம் கிராமத்தில், புதிய இரும்பாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விவசாய நிலத்தில், இரும்பு ஆலை அமைவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு
 இரும்பாலை அமைக்க வேண்டாம் :விவசாயிகள் கடும் எதிர்ப்பு

திருப்பூர்:பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால், இரும்பு ஆலை அமைய அனுமதிக்க கூடாதென, தாராபுரம் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தாராபுரம் தாலுகா, வடுகபாளையம் கிராமத்தில், புதிய இரும்பாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விவசாய நிலத்தில், இரும்பு ஆலை அமைவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கொழுமங்குளி, சங்கரண்டாம்பாளையம், வடுகபாளையம், சிறுகிணர், கண்ணாங்கோவில் கிராமங்களை சேர்ந்த மக்கள், இரும்பு ஆலை அமைய அனுதிக்க கூடாதென, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர்.இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,'மாசுக்கட்டுப்பாடு வாரியம், முறையான ஆய்வு நடத்தாமல், இரும்பாலை இயங்க அனுமதி வழங்கியுள்ளது; மக்களிடையே கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்படவில்லை. ஐந்து கிராம மக்களுக்கு உருவாகும் பாதிப்புகளை உணர்ந்து, அனுமதி வழங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், தனியார் இரும்பு ஆலை அமைய, அனுமதி வழங்க கூடாதென, கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X