மஹா., முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் வீடுகளில் சி.பி.ஐ., அதிரடி சோதனை

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி-மஹாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.மஹாராஷ்டிராவின் மும்பையில், ஓட்டல்கள் மற்றும் 'பார்'களில் இருந்து மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தர வேண்டும் என மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் கூறியதாக, முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் குற்றம் சாட்டினார்.இந்த ஊழல்

புதுடில்லி-மஹாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.



latest tamil news


மஹாராஷ்டிராவின் மும்பையில், ஓட்டல்கள் மற்றும் 'பார்'களில் இருந்து மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தர வேண்டும் என மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் கூறியதாக, முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் குற்றம் சாட்டினார்.இந்த ஊழல் புகாரால் தேஷ்முக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக விசாரிக்கும்படி சி.பி.ஐ.,க்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே விசாரணை தொடர்பான ரகசிய ஆவணங்களை சி.பி.ஐ., - எஸ்.ஐ., அபிஷேக் திவாரியிடம் இருந்து, தேஷ்முக்கின் வழக்கறிஞர் ஆனந்த் தாகா முறைகேடாக பெற்றதாக புகார் எழுந்தது.


latest tamil news


இதையடுத்து ஆனந்த் தாகா மற்றும் அபிஷேக் திவாரி மீது சமீபத்தில் வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். அடுத்ததாக ரகசிய ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக அனில் தேஷ்முக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த சி.பி.ஐ., முடிவு செய்தது.

அதற்கான 'வாரன்ட்' பெறப்பட்ட நிலையில் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக்கின் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையை நேற்று துவங்கினர். தேஷ்முக்குடன் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
12-அக்-202108:30:10 IST Report Abuse
PKN பில்கிளின்டன் மறக்க முடியாத நபர் எப்பவெல்லாம் மோனிகா லெவன்ஷி விவகாரத்தை எதிர்கட்சிகளோ பத்திரிகைகளோ கையில் எடுக்கிறார்களோ அப்ப எல்லாம் தீவிரவாதிகளை அளிக்கிறேன் என்ற போர்வையில் ஆப்கானிஸ்தானின் மீது ஏவுகணை தாக்குதலை நிகழ்த்துவார் அது ஏனோ ஞாபகத்துக்கு வருது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
12-அக்-202108:12:34 IST Report Abuse
duruvasar தேஷ்முக் நல்லவரா, வல்லவரா என விவாதம் வைத்து ஒரு நல்ல நியாயமான தீர்பை வழங்க தமிழக நடுநிலை காட்சி ஊடகங்கள் முன்வரவேண்டும். இவர் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி குடையின் கீழ் வருபவர் என்பதை முன்களப்ஸ் மறந்தது வியப்பாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X