பொது செய்தி

தமிழ்நாடு

வேகமாக நிரம்பும் உத்திரமேரூர் ஏரி; பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

Added : அக் 12, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : அனுமந்தண்டலம் செய்யாறு தடுப்பணையில் இருந்து திருப்பி விடப்படும் வெள்ளநீரால், பருவ மழைக்கு முன் உத்திரமேரூர் ஏரி நிரம்பி வருவதால், 18 கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் நுழைகிறது.கன மழைஅனுமந்தண்டலம், வெங்கச்சேரி,
 வேகமாக நிரம்பும் உத்திரமேரூர் ஏரி;   பாசன விவசாயிகள் மகிழ்ச்சி


உத்திரமேரூர் : அனுமந்தண்டலம் செய்யாறு தடுப்பணையில் இருந்து திருப்பி விடப்படும் வெள்ளநீரால், பருவ மழைக்கு முன் உத்திரமேரூர் ஏரி நிரம்பி வருவதால், 18 கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் நுழைகிறது.கன மழைஅனுமந்தண்டலம், வெங்கச்சேரி, இளையனார்வேலுார், வயலக்காவூர் வழியாக, திருமுக்கூடல் பகுதியில், பாலாறு மற்றும் வேகவதி ஆற்றுடன் கலக்கிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான, பெருநகர் செய்யாற்றில் கரைபுரண்டு வந்த வெள்ள நீர் அனுமந்தண்டலம் தடுப்பணையில் தேக்கப்பட்டு, உத்திரமேரூர் ஏரிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

தற்போது, உத்திரமேரூர் பெரிய ஏரி, இரண்டு கண் பாலம் வழியாக செல்லும் வெள்ளநீரால் சிற்றேரி வேகமாக நிரம்பி வருகிறது.வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே உத்திரமேரூர் ஏரி வேகமாக நிரம்பி வருவதால், ஏரிப்பாசனம் பெறும், 18 கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.9 அடியில் தண்ணீர்உத்திரமேரூர் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உத்திரமேரூர் சிற்றேரியின் மொத்த அளவான 20 அடி ஆழத்தில், 9 அடிக்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் ஏரிக்கரை, மதகுகளின் ஷட்டர் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது கண்காணித்து ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X