தமிழ்நாடு

அச்சத்தையும், பிரச்னையையும் துாக்கி எறிந்து விடுங்கள்: மனதில் உறுதி வேண்டும்! சர்வதே பெண் குழந்தைகள் தினத்தில் அறிவுறுத்தல்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021
Share
Advertisement
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், பிரச்னைகளை கண்டு ஒருபோதும் அச்சப்படாமல், அதனை துாக்கி எறியுங்கள் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.திருப்பூரில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், உலக பெண் குழந்தைகள் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம், ஜெய்வாபாய் பெண்கள்
அச்சத்தையும், பிரச்னையையும் துாக்கி எறிந்து விடுங்கள்: மனதில் உறுதி வேண்டும்!  சர்வதே பெண் குழந்தைகள் தினத்தில் அறிவுறுத்தல்

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், பிரச்னைகளை கண்டு ஒருபோதும் அச்சப்படாமல், அதனை துாக்கி எறியுங்கள் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

திருப்பூரில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், உலக பெண் குழந்தைகள் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம், ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் நடந்தது. சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பிரஷ்னேவ் தலைமை வகித்தார். பேனல் வக்கீல் ஷெர்லின், தலைமையாசிரியர் ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர்.இதில், நீதிபதி பிரஷ்னேவ் பேசியதாவது:பெண் குழந்தைகள் தைரியமாக இருக்கவேண்டியது அவசியம்.

தவறுகள் கண்டறியும் போது, அத்துமீறப்படும் போதும் பெண்கள் அச்சமின்றி அவற்றை தட்டிக் கேட்க வேண்டும். அதற்கான மனதைரியமும், சட்டம் குறித்த விழிப்புணர்வும் கட்டாயம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தவறு செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இதற்கான சட்டங்கள் குறித்த அறிவை பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பெண்களுக்குசம உரிமைஅவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கருத்தரங்கு நடந்தது.

சர்வதேச வணிகம் துறை, 'விழுதுகள்' அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியின் துவக்கத்தில், கல்லுாரி வளாகத்தில், 100 மூங்கில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கருத்தரங்கில், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர், சர்வதேச வணிக பாடப்பிரிவு துறை தலைவர் பாலமுருகன் சிறப்புரை ஆற்றினார்.'விழுதுகள்' அறக்கட்டளை இயக்குனர் தங்கவேல் பேசுகையில், ''குடும்பத்தின் மகிழ்ச்சி, உயர்வுக்கு பெண் குழந்தைகள் காரணமாக உள்ளனர்.அவர்களை பாதுகாப்பதும், வாழ்வில் உயர்த்துவதும் ஒவ்வொரு வரின் கடமை. பெண் குழந்தைகளுக்கு சம உரிமை வழங்குவதை குடும்பத்தில் இருந்து தான் துவங்க வேண்டும்; ஆண், பெண் குழந்தைகளை, அனைத்து விதங்களிலும் சமமாக நடத்த வேண்டும்,'' என்றார்.
வெள்ளி கொலுசு பரிசு
உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி திருப்பூர் பாரதி, ரோட்டரி விஷன், ஜே.பி., வெள்ளிமாளிகை சார்பில், நேற்று தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆறு குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு வழங்கப்பட்டது. அரசு குழந்தைகள் டாக்டர் ஜனனி தலைமை வகித்தார். ஜே.பி., வெள்ளி மாளிகை உரிமையாளர் ஜெயபிரகாஷ், ரோட்டரி திருப்பூர் பாரதி தலைவர் ராஜலட்சுமி, செயலாளர் சரண்யா, பொருளாளர் பீரித்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தவறுகள் கண்டறியும் போது, அத்துமீறப்படும் போதும் பெண்கள் அச்சமின்றி அவற்றை தட்டிக் கேட்க வேண்டும். அதற்கான மனதைரியமும், சட்டம் குறித்த விழிப்புணர்வும் கட்டாயம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்

- நமது நிருபர்கள் குழு - .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X