குறைகேட்பு முகாமில் 13 மனுக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைகேட்பு முகாமில் 13 மனுக்கள்

Added : அக் 12, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு முகாமில், 13 மனுக்கள் பெறப்பட்டன.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பதிவு குறைகேட்பு முகாமை மதுரையில் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் குறைகேட்பு முகாம் நடந்தது.அதன்படி, திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள மாவட்ட தலைமை பத்திரப்பதிவு

திருப்பூர்:திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு முகாமில், 13 மனுக்கள் பெறப்பட்டன.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பதிவு குறைகேட்பு முகாமை மதுரையில் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் குறைகேட்பு முகாம் நடந்தது.அதன்படி, திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள மாவட்ட தலைமை பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) ராமசாமி தலைமையில் குறைகேட்பு முகாம் நடந்தது.இதில், நில பிரச்னை, ஆவணங்கள் கேட்டும் மற்றும் பிற புகார்கள் தொடர்பாக, 13 மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு வாரமும் இம்முகாம் நடக்க உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X