பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் குடியிருப்பு வளாகம் திறப்பு விழாவுக்கு காத்திருப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : கவரைப்பேட்டை போலீஸ் நிலையம் பின்புறம், 2019ம் ஆண்டு, போலீசார் குடியிருப்பு வளாக கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. மூன்று மாதங்களுக்கு முன், கட்டுமான பணிகள் முழுமை பெற்றன.காவலர்களுக்கு அடுக்கு மாடியில், 36 வீடுகள், சப் - இன்ஸ்பெக்டர்களுக்கு இரு தனி வீடுகள், இன்ஸ்பெக்டருக்கு ஒரு தனி வீடு நிறுவப்பட்டுள்ளன.கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும்
 போலீசார் குடியிருப்பு வளாகம் திறப்பு விழாவுக்கு காத்திருப்பு

கும்மிடிப்பூண்டி : கவரைப்பேட்டை போலீஸ் நிலையம் பின்புறம், 2019ம் ஆண்டு, போலீசார் குடியிருப்பு வளாக கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.

மூன்று மாதங்களுக்கு முன், கட்டுமான பணிகள் முழுமை பெற்றன.காவலர்களுக்கு அடுக்கு மாடியில், 36 வீடுகள், சப் - இன்ஸ்பெக்டர்களுக்கு இரு தனி வீடுகள், இன்ஸ்பெக்டருக்கு ஒரு தனி வீடு நிறுவப்பட்டுள்ளன.கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார், வெளி இடங்களில் இருந்து வேலைக்கு வந்து செல்கின்றனர்.

சிலர் அதே பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இதனால், போலீசாருக்கு அலைச்சல், நேரம், பண விரயம் ஏற்படுவதுடன், அவசர பணிக்கு வந்த செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.போலீசார் பயன் பெறும் வகையில், பணி முடிந்து மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள கவரைப்பேட்டை போலீசார் குடியிருப்பு வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என, போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X