தமிழ்நாடு

பேறுகால வார்டுக்கு வெளியே தங்கும் கூடம் அவசிய தேவை

Added : அக் 12, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மருத்துவமனை பேறுகால வார்டு வெளியே பார்வையாளர்கள் காத்திருக்க, தங்கும் கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பேறுகாலம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆகியவை ஒரே கட்டடத்தில் செயல்பட 18 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.இங்கு
 பேறுகால வார்டுக்கு வெளியே தங்கும் கூடம் அவசிய தேவை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மருத்துவமனை பேறுகால வார்டு வெளியே பார்வையாளர்கள் காத்திருக்க, தங்கும் கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பேறுகாலம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆகியவை ஒரே கட்டடத்தில் செயல்பட 18 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.இங்கு தினமும் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்; தினம் 20 பேருக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.

பிரசவத்திற்கு பின் தாய் - சேயை பார்க்க, குடும்பத்தினர், உறவினர்கள் வருகின்றனர். ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அவர்கள் செல்ல முடியும். அதுவரை, புதிய கட்டடம் வெளியே காத்திருக்கின்றனர். மழை வந்தாலோ, வெயில் அடித்தாலோ அவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.உறவினர்கள் கூறியதாவது:

புதிய கட்டடம் அருகில் பார்வையாளர்கள் தங்க கட்டடம் அமைத்தால் வசதியாக இருக்கும். மழை, வெயில் காலத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர். பழைய கட்டடத்தில் பார்வையாளர்கள் தங்குவதற்கு வசதி இருந்தது. அதேபோல் இங்கும் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X