பொது செய்தி

தமிழ்நாடு

பொது பயன்பாட்டு மையம் விசைத்தறியாளர் ஆலோசனை

Added : அக் 12, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் அருகே அமையவுள்ள பொது பயன்பாட்டு மையம் குறித்து, விசைத்தறி முதலீட்டாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம், தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. இவை, அகமதாபாத், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றப்பட்டு விற்பனையாகின்றன.இந்த

பல்லடம்:பல்லடம் அருகே அமையவுள்ள பொது பயன்பாட்டு மையம் குறித்து, விசைத்தறி முதலீட்டாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம், தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. இவை, அகமதாபாத், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றப்பட்டு விற்பனையாகின்றன.இந்த செயல்பாடுகளை இங்கேயே மேற்கொள்வதன் மூலம் விசைத்தறி தொழில் சார்ந்தவர்கள் பயனடைவர் என்பதால், பல்லடத்தில், பொது பயன்பாட்டு மையம் அமைக்க, விசைத்தறியாளர்கள் வலியுறுத்தினர். மத்திய மாநில அரசுகள் இதற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, பல்லடத்தில், பொது பயன்பாட்டு மையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.இது குறித்த முதலீட்டாளர்கள் ஆலோசனை கூட்டம், பல்லடத்தில் நடந்தது. முதலீட்டாளர்கள் குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இயக்குனர்கள் முத்துக்குமாரசாமி, பூபதி, பாலு, கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இது குறித்து பாலசுப்பிரமணியம் கூறியதாவது:பொது பயன்பாட்டு மையத்தில், விசைத்தறி உரிமையாளர்கள், 55 பேர் முதலீட்டாளர்களாக உள்ளனர். மத்திய அரசு நிதி, 11.53 கோடி, மாநில அரசின், 1.76 கோடி, மற்றும் விசைத்தறியாளரின் பங்கு, 4.30 கோடி ஆகியவற்றுடன், 17.59 கோடி ரூபாய் செலவில், பொது பயன்பாட்டு மையம் அமையவுள்ளது.இதற்காக கேத்தனுாரில் உள்ள, 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசின் அனுமதி கிடைத்த நிலையில், தற்போது கட்டட அனுமதியும் பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில், மாநில அரசு, 1.76 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது.தொடர்ந்து, கட்டட பொறியாளர்களுடன் ஆலோசித்து, மதிப்பீடு கோரப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் பூமி பூஜையுடன் பொது பயன்பாட்டு மைய கட்டுமான பணிகள் துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X