மாநகராட்சி வார்டு அதிகரிக்க திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி வார்டு அதிகரிக்க திட்டம்

Added : அக் 12, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் தற்போது, 60 வார்டுகள் உள்ளன. இவை தலா 15 வார்டுகள் அடங்கிய ஒரு மண்டலம் என நான்கு மண்டலங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நகராட்சி நிர்வாக ஆணையரகத்திலிருந்து திருப்பூர் மாநகராட்சியில் தற்போது உள்ள வார்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக எந்த அடிப்படையில், எவ்வளவு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் தற்போது, 60 வார்டுகள் உள்ளன. இவை தலா 15 வார்டுகள் அடங்கிய ஒரு மண்டலம் என நான்கு மண்டலங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நகராட்சி நிர்வாக ஆணையரகத்திலிருந்து திருப்பூர் மாநகராட்சியில் தற்போது உள்ள வார்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக எந்த அடிப்படையில், எவ்வளவு வார்டுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கருத்துரு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, வார்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. வரும் மாநகராட்சி தேர்தலில் புதிதாக அறிவிக்கப்படும் வார்டுகள் அடிப்படையில உள்ளாட்சி தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X