அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பார்' அகற்றாவிடில் போராட்டம் ;எம்.எல்.ஏ., அதிரடி அறிவிப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:அவிநாசி ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 'எப்.எல். 2 பார்' அகற்ற வேண்டும் என எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், கலெக்டருக்கு அனுப்பிய மனு விவரம்:அவிநாசி ரோடு, பங்களா வீதி, ஓடக்காடு பகுதிக்கு செல்லும் பிரதான ரோடாக உள்ளது. குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியன உள்ளன. இந்த ரோட்டில் ராயல் கிளப் என்ற பெயரில்

திருப்பூர்:அவிநாசி ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 'எப்.எல். 2 பார்' அகற்ற வேண்டும் என எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், கலெக்டருக்கு அனுப்பிய மனு விவரம்:அவிநாசி ரோடு, பங்களா வீதி, ஓடக்காடு பகுதிக்கு செல்லும் பிரதான ரோடாக உள்ளது. குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியன உள்ளன. இந்த ரோட்டில் ராயல் கிளப் என்ற பெயரில் உரிமம் பெற்ற மதுக்கூடம் (பார்) உள்ளது.இங்கு வருவோர் மது அருந்தி விட்டு அப்பகுதியினருக்கு பெரும் தொந்தரவு அளிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மதுக்கூடத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்து, அதன் தீர்மானத்தை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அதிகாரிகளுக்கும் அளித்தனர்.உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமையில், அந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.இந்த விவகாரத்தில் மக்களை போராட்டம் நடத்தும் அளவுக்கு கொண்டு செல்லாமல் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பாரை அங்கிருந்து அகற்ற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X