உத்தரகண்ட் அமைச்சர் காங்கிரசில் ஐக்கியம்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
டேராடூன்-உத்தரகண்ட் அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யஷ்பால் ஆர்யா, தன் மகனும் எம்.எல்.ஏ.,வுமான சஞ்சீவ் ஆர்யாவுடன் காங்., கட்சியில் நேற்று இணைந்தார்.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரான யஷ்பால் ஆர்யா, நேற்று பா.ஜ.,வில் இருந்து

டேராடூன்-உத்தரகண்ட் அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யஷ்பால் ஆர்யா, தன் மகனும் எம்.எல்.ஏ.,வுமான சஞ்சீவ் ஆர்யாவுடன் காங்., கட்சியில் நேற்று இணைந்தார்.



latest tamil news


உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரான யஷ்பால் ஆர்யா, நேற்று பா.ஜ.,வில் இருந்து திடீரென விலகினார்.

இதையடுத்து தன் மகனும், எம்.எல்.ஏ.,வுமான சஞ்சீவ் ஆர்யாவுடன் சேர்ந்து காங்., கட்சியில் இணைந்தார்.டில்லிக்குச் சென்ற யஷ்பால் ஆர்யாவும், அவரது மகனும் நேற்று காலை ராகுலை சந்தித்துப் பேசினர். பின், இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இணைந்தனர்.

ஏற்கனவே உத்தரகண்ட் மாநில காங்., தலைவராக பதவி வகித்து வந்த யஷ்பால் ஆர்யா, 2017ல் பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார். பா.ஜ.,வுக்கு ஓட்டம்ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர்களான தேவேந்தர் ராணா மற்றும் சுர்ஜித் சிங் ஸ்லாத்தியாவும் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகினர்.


latest tamil news


இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் பூரி மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில், அவர்கள் இருவரும் நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,வான ராணா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் இளைய சகோதரர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
12-அக்-202110:43:06 IST Report Abuse
பாமரன் பகோடா கம்பெனியில் இருந்து காங்கிரசு கட்சி வந்தால் ஐக்கியம்... அதே மத்த கட்சியினர் பாஜகவிற்கு வந்தால் ஓட்டம்... என்னா ஒரு வில்லத்தனம்... ஸாரி பத்திரிகை ஜனநாயகம்...🤔🤔 அப்புறம் பகோடாஸ் காங் போன ஆட்களை மட்டுமே துரோகின்னு வையனும்... பொத்தாம் பொதுவாக சொல்லிடாதீங்க...
Rate this:
Cancel
12-அக்-202108:35:41 IST Report Abuse
பேசும் தமிழன் தெரிந்தே கொள்ளி கட்டையால் தலையை சொறிபவனை என்ன செய்ய முடியும்...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
12-அக்-202108:06:51 IST Report Abuse
duruvasar இதைத்தான் போனோமா, வந்தோமான்னு இருக்கனுமுன்னு சொல்லப்படுவதோ. தமிழ்நாட்டுக்கு வந்து இலவசமாக மொட்டை போட்டுகிட்டு போயிருந்திருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X