பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் விண்ணப்பம் எழுதும் மகளிர் குழுவினர்

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:பொதுமக்களுக்கு உதவும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில், விண்ணப்பம் எழுதி கொடுக்க, மகளிர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அடுக்குமாடி வீடு கேட்டு மனு கொடுத்தனர். அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தியும் மனு கொடுத்தனர்.கடந்த சில வாரங்களாக, இலவச வீட்டுமனை மற்றும் அடுக்குமாடி வீடு கேட்டு,
 கலெக்டர் அலுவலக வளாகத்தில் விண்ணப்பம் எழுதும் மகளிர் குழுவினர்

திருப்பூர்:பொதுமக்களுக்கு உதவும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில், விண்ணப்பம் எழுதி கொடுக்க, மகளிர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அடுக்குமாடி வீடு கேட்டு மனு கொடுத்தனர். அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தியும் மனு கொடுத்தனர்.கடந்த சில வாரங்களாக, இலவச வீட்டுமனை மற்றும் அடுக்குமாடி வீடு கேட்டு, நுாற்றுக்கணக்கானோர் மனு கொடுத்தனர். இவ்வாய்ப்பை பயன்படுத்தி, விண்ணப்ப படிவம், 20 ரூபாய்; பூர்த்தி செய்து கொடுக்க, 50 ரூபாய் என, 70 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, பொதுமக்களுக்காக, மனு எழுதி கொடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மகளிர் திட்டத்தின் மூலம், மகளிர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து மகளிர் குழுவினர் கூறுகையில், 'அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி, மனு எழுதி கொடுக்கிறோம்; விண்ணப்ப படிவம், 10 ரூபாய்; எழுதி கொடுக்க ஐந்து ரூபாய் என, 15 ரூபாய் மட்டும் கட்டணம் வசூலிக்கிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X