பொது செய்தி

தமிழ்நாடு

குறைகேட்பு கூட்டத்தில், மனுக்கள் குவிந்தன!

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, தனி துணை கலெக்டர் குமரேசன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி ஆகியோர், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.ஊழல் ஒழிப்பு இயக்க நிர்வாகி நல்லப்பன்:உடுமலை ஒன்றியம், செல்லப்பம்பாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டத்தில்,
 குறைகேட்பு கூட்டத்தில், மனுக்கள் குவிந்தன!

திருப்பூர்:பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, தனி துணை கலெக்டர் குமரேசன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி ஆகியோர், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.ஊழல் ஒழிப்பு இயக்க நிர்வாகி நல்லப்பன்:உடுமலை ஒன்றியம், செல்லப்பம்பாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டத்தில், வரவு -செலவு விவரம் முறையாக வெளியிடவில்லை. பொதுமக்கள் எதிர்ப்பால், கிராமசபா ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த முறை, கலெக்டர் தலைமையில், கிராமசபா நடத்த வேண்டும்.* சிவசேனா மாநில செயலாளர் சுந்தரவடிவேலன்:காங்கயம் தாலுகா, பரஞ்சேர்வழி, மருதுறை, பழைய கோட்டை, பொன்பரப்பி கிராமங்களின் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. நீர்நிலை பாதிக்கப்படுகிறது. தேங்காய் நார் மற்றும் நார் சோற்றுகட்டி தயாரிக்கும் ஆலைகளை மூட வேண்டும்.* உடுமலை - விருகல்பட்டி ஊராட்சி மக்கள்:விருகல்பட்டி ஊராட்சி பழையூர் கிராமத்தில் ரேஷன் கடை வசதி இல்லை; நுாறு குடும்பத்தினர், புதுார் கிராமம் சென்று, ரேஷன் பொருள் வாங்கி வருகின்றனர். பழையூரில் புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும்.* காங்கயம் முகாம் நகர் மக்கள்:காங்கயம், இலங்கை தமிழர் முகாம் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.*தாராபுரம் - பொன்னாபுரம் மக்கள்:கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக, வீடு வசதியில்லாமல் அவதிப்படுகிறோம். தகுதியான, ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.* மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்:வீரபாண்டி முதல் கோவில் வழி வரை செல்லும் ரோட்டையும், கோவில்வழியில் இருந்து நல்லுார் வரை செல்லும் தார்ரோட்டையும் விரைவில் சீரமைக்க வேண்டும். ரோடு பழுதாக இருப்பதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.*சிவசேனா இளைஞரணி நிர்வாகிகள்:ஆடு, மாடுகளை துன்புறுத்தி, வாகனங்களில் கடத்தி செல்வது குறையவில்லை. கால்நடைகளை துன்புறுத்தி, வாகனங்களில் கடத்தி செல்வதை தடுக்கும் வகையில், முக்கிய ரோடுகளில், சோதனை சாவடி அமைத்து கண்காணிக்க வேண்டும். 'டென்ஷன்' ஆன கலெக்டர்குறைகேட்பு கூட்டத்துக்கு முன்பதாக, முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து, கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். சில துறை அதிகாரிகள், முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் தொடர்பான விவரங்கள் எடுக்காமல் வந்திருந்தனர்.உடனே கலெக்டர்,''அதிகாரிகள் கூட்டத்துக்கு வரும்பொழுது, முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் விவரம், நடவடிக்கை விவரத்தை பார்த்துட்டு வரணும். 'ஆன்லைன்'ல பார்க்காமல், யாரும் கூட்டத்துக்கு வரவே வேண்டாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X