செடிகள் சூழ்ந்த மின் கம்பம்; சப்ளை அடிக்கடி பாதிப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:கூட்டுறவு துறை அலுவலக வளாகத்தில் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், மின் இணைப்புகள் அடிக்கடி துண்டித்து மின் சப்ளை பாதிக்கப்படுகிறது.திருப்பூர் பல்லடம் ரோட்டில் திருப்பூர் நகர கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது. பிரதான ரோட்டில் வணிக வளாகமும், பின்பகுதியில் சங்க அலுவலகம் மற்றும் அதன் கட்டடங்களும் உள்ளன.வணிக வளாகத்தில் ரேஷன் கடை, கேன்டீன் மற்றும்

திருப்பூர்:கூட்டுறவு துறை அலுவலக வளாகத்தில் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், மின் இணைப்புகள் அடிக்கடி துண்டித்து மின் சப்ளை பாதிக்கப்படுகிறது.திருப்பூர் பல்லடம் ரோட்டில் திருப்பூர் நகர கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது. பிரதான ரோட்டில் வணிக வளாகமும், பின்பகுதியில் சங்க அலுவலகம் மற்றும் அதன் கட்டடங்களும் உள்ளன.வணிக வளாகத்தில் ரேஷன் கடை, கேன்டீன் மற்றும் கடைகள் உள்ளன. இவற்றுக்கான மின் இணைப்பு வளாகம் வழியாக அமைந்துள்ள மின் கம்பம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

வளாக த்தில் பெருமளவு தேவையற்ற செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், செடி, கொடிகள் வளர்ந்து அங்குள்ள மின் கம்பத்தை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், முன் பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் மின் இணைப்பு அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின் சப்ளை பாதிக்கப்படுகிறது. வளாகத்தில் உரிய முறையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.---திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்க வணிக வளாகத்தில் புதர் செடிகள் மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. அதே வளாகத்தில் உள்ள மின்கம்பியில் செடிகள் படர்ந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X