பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு கழிவு சேகரிப்பு ரோட்டரி வசம் ஒப்படைப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்::திருப்பூர் ரோட்டரி சங்கம், பாதிப்பு ஏற்படுத்தும் மின்னணு கழிவுகளை சேகரித்து, அவற்றை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதற்காக, ரோட்டராக்ட் மற்றும் இன்டராக்ட் கிளப் மூலம், பள்ளி, கல்லுாரிகளில் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பிரன்ட்லைன் குழும பள்ளிகள் இணைந்து, பெற்றோர், மாணவர்களிடம் மின்னணு கழிவுகள்
 மின்னணு கழிவு சேகரிப்பு ரோட்டரி வசம் ஒப்படைப்பு

திருப்பூர்::திருப்பூர் ரோட்டரி சங்கம், பாதிப்பு ஏற்படுத்தும் மின்னணு கழிவுகளை சேகரித்து, அவற்றை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதற்காக, ரோட்டராக்ட் மற்றும் இன்டராக்ட் கிளப் மூலம், பள்ளி, கல்லுாரிகளில் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பிரன்ட்லைன் குழும பள்ளிகள் இணைந்து, பெற்றோர், மாணவர்களிடம் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டது.இந்த கழிவுகளை, ரோட்டரி சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, பிரன்ட்லைன் பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, ரோட்டரி செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் விவேகானந்தா மற்றும் வைத்தியநாதன் பங்கேற்றனர். மின்னணு கழிவுகளை ஒப்படைத்த மாணவ, மாணவியருக்கு சான்று மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X