சாவு வீட்டிலும் காசு பறித்த போலீஸ்: சிறுவன் வாயில் மது ஊற்றி கொடூரம்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | |
Advertisement
ஆயுத பூஜைக்கு, அலங்கார பொருட்கள் வாங்க, சித்ராவும், மித்ராவும் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தனர்.''ஒரு வழியா, ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் அமைதியா நடந்து முடிஞ்சுடுச்சு,'' ஆரம்பித்தாள் சித்ரா.''அப்படியே, சீக்கிரமா நகர்ப்புற தேர்தல் வரும்ங்கற நம்பிக்கைல, இப்பவே கட்சிக்காரங்க தயாராகிட்டாங்க்கா...''''ஆமான்டி மித்து. டவுன் எலக்ஷன்ல, கார்ப்ரேஷனை எப்படியாச்சும்
 சாவு வீட்டிலும் காசு பறித்த போலீஸ்: சிறுவன் வாயில் மது ஊற்றி கொடூரம்

ஆயுத பூஜைக்கு, அலங்கார பொருட்கள் வாங்க, சித்ராவும், மித்ராவும் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தனர்.''ஒரு வழியா, ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் அமைதியா நடந்து முடிஞ்சுடுச்சு,'' ஆரம்பித்தாள் சித்ரா.

''அப்படியே, சீக்கிரமா நகர்ப்புற தேர்தல் வரும்ங்கற நம்பிக்கைல, இப்பவே கட்சிக்காரங்க தயாராகிட்டாங்க்கா...''

''ஆமான்டி மித்து. டவுன் எலக்ஷன்ல, கார்ப்ரேஷனை எப்படியாச்சும் பிடிச்சாகணும்ன்னு, 'அசைன்மென்ட்' போட்டு, எதிர்க்கட்சிக்காரங்க வேல பாக்குறங்களாம். அதுக்காக, பொள்ளாச்சிக்காரரு, சிட்டிக்குள்ளேயே தங்கி கட்சி வேல பார்க்க வசதியா, வாடகைக்கு வீடு பார்க்க சொல்லிட்டாராம்...''ஆளுங்கட்சி 'அக்கப்போர்'''பொதுவா, உள்ளாட்சி தேர்தல்ல, ஆளுங்கட்சிக்காரங்க 'பரபர'ன்னு இருப்பாங்க. எப்படி, அவ்வளவு நம்பிக்கையா, இலை கட்சிக்காரங்க தேர்தலுக்கு 'ரெடி' சந்தேக தோரணையுடன் கேட்டாள் மித்ரா.

''நீ சொல்றது 'கரெக்ட்' தான் மித்து. பல இடங்கள்ல ஆளுங்கட்சி நிர்வாகிகளோட, 'அக்கப்போர்' தாங்கலையாம். கவர்மென்ட் ஆபீசர்கள மிரட்டறது, போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து பண்றதுன்னு, அவங்க மேல நிறைய புகார் வருதாம்,''

''சூரியக்கட்சியின் அடிமட்ட தொண்டர் கூட, ஆபீசர்களை ஆட்டிப்படைக்க 'ட்ரை' பண்றாங்களாம். இதனால, அவங்களுக்கு உள்ளூர் மக்கள்கிட்ட கெட்ட பேரு தான் கிடைக்கும். இதை, சாதகமாக்கி, ஓட்டு வாங்கிடலாமுன்னு, இலைக்கட்சிக்காரங்க 'கணக்கு' போட்டு வைச்சிருக்காங்களாம்,''

''இதுக்கு உதாரணமா ஒரு விஷயத்தை சொல்றேன் கேளு. அவிநாசிக்கு பக்கத்தில கருவலுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த ஏரியாவில, தனியார் அமைப்பை சேர்ந்தவங்க மராத்தான் போட்டி நடத்தினாங்க...''

''நுாத்துக்கணக்கானவங்க ஓடினாங்க. கொரோனா அச்சுறுத்தல் இருக்கிறதால, இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்தும் போது, ரெவின்யூ, போலீஸ்கிட்டேயிருந்து அனுமதி வாங்கோணும். ஆனா, எந்த அனுமதியும் இல்லாம, போட்டியை நடத்தி முடிச்சிருக்காங்க,''

''எல்லாம், அந்த 'அவிநாசியப்பர்' பாத்துப்பாருன்னு தைரியத்தில போட்டி நடத்திட்டோம்னு, மராத்தான் ஏற்பாடு பண்ணவங்க சொல்லியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.துண்டு விரிக்கிறாங்க!''மித்து, உள்ளாட்சி தேர்தல் ஜூரத்தில், திருப்பூரிலயும் ஒன்னு நடந்துச்சு. சமீபத்துல, கோவையில நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, கை கட்சியோட மாநில தலைவரு, திருப்பூர்ல இருக்க அவரோட, மகள் வீட்டுக்கு வந்துருக்காரு. இதை தெரிஞ்சுகிட்ட, பொள்ளாச்சி தொகுதி பொறுப்பாளரு, ஊர் முழுக்க விளம்பரம் செஞ்சு அசத்திட்டாராம்,''

''இதுக்கு முன்னாடி, கார்ப்பரேஷன் துணை மேயரா இருந்த அவரு, இம்முறையும் 'சீட்' வாங்க, இப்பவே துண்டு விரிக்க ஆரம்பிச்சுட்டாரேன்னு, கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. எல்லாம் அந்த 'செந்தில் வேலவனு'க்கே வெளிச்சம்,'' என்றாள் சித்ரா.

கடைவீதிக்குள் நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் இருந்ததால், இருவரும், சற்று தள்ளி இருந்த ஓட்டலுக்கு சென்று, காபி ஆர்டர் செய்தனர்.


திருந்தவே மாட்டாங்களா?

''என்னதான் பெரிய அதிகாரிங்க சாட்டையை சுழட்டினாலும், சில போலீசோட சேட்டை அடங்க மாட்டேங்குது,'' என போலீஸ் மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''ஏங்க்கா…என்ன ஆச்சு?''

''தெக்கலுார் பக்கத்துல, காமநாயக்கன்பாளையம் கிராமத்தில, 20, 19 வயசுள்ள ரெண்டு பசங்க, 'ஜாலியா, ஊர் சுத்திட்டு வரலாம்…வா' ன்னு, ஒரு 11 வயது சிறுவனை, அங்க இருக்கற குளத்துகிட்ட கூட்டிட்டு போயிருக்காங்க,''

''சிறுவனை வலுக்கட்டாயமாக மது குடிக்கவும் வைச்சிருக்காங்க. போதை தலைக்கேறியசிறுவன், மயங்க, அவனை ஊருக்குள்ள இருக்கற கோவில் திட்டுல படுக்க வைச்சிட்டு, ரெண்டு பசங்களும் 'எஸ்கேப்' ஆகிட்டாங்களாம்,''

''விஷயம் தெரிஞ்சு, பதறிப்போன சிறுவனின் பெற்றோர், திருப்பூர் ஜி.எச்.,ல சேர்த்து, பிழைக்க வச்சிட்டாங்க. தன் பையனோட நெலைமைக்கு காரணமான அந்த ரெண்டு பசங்க மேலேயும் நடவடிக்கை எடுக்கோணும்னு, அவிநாசி போலீசில புகார் குடுத்திருக்காங்க. ஆனாலும், இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கலையாம்,'' விளக்கினாள் சித்ரா.

''இப்பவே இப்டி இருக்கற அந்த பசங்கள கடுமையா தண்டிச்சாத்தான், திரும்பவும் இந்த மாதிரி தப்பெல்லாம் நடக்காது'' என ஆவேசப்பட்டாள் மித்ரா, ''பிணம் தின்னி கழுகுகளை தண்டிச்சா பரவாயில்லக்கா,'' என்றாள்.''புரியுற மாதிரி சொல்லு...''''அக்கா, போன வாரம் கொண்டத்துக்காளியம்மன் குடிகொண்டுள்ள ஊருக்கு பக்கத்துல, தாயும், மகளும் டூவீலர்ல போயிருக்காங்க. டயர் வெடிச்சு, ரெண்டு பேரும் கீழே விழுந்ததில, தாய் 'ஸ்பாட்டில்' இறந்துட்டாங்க. அவங்களோட டூவீலர், போலீஸ் கஸ்டடியில போயிடுச்சு...''

''அதை வாங்கறதுக்காக, உறவுக்காரங்க போய் கேட்டதுக்கு,ஆர்.டி.ஓ., ஆபீஸ் செலவு, அது, இதுன்னு சொல்லி, 15 ஆயிரம் ரூபா கொடுத்துட்டு, வண்டியை எடுத்துட்டு போங்கன்னு போலீஸ்காரங்க சொல்லியிருக்காங்க. கடைசியா, ஒரு கட்சியோட வி.ஐ.பி., தலையிட்டு, வாங்கி கொடுத்தாராம்...''

''இது எல்லாம் டூ மச்... மித்து. இந்த மாதிரி போலீசார் மீது நடவடிக்கை எடுத்தா பரவாயில்லயே,'' என, உணர்ச்சிவசப்பட்ட சித்ரா,''வர்ற புகார்களை சரியா விசாரிச்சாலே, பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்,'' என்றாள்.

''சிட்டி லிமிட்டில், போன வாரம் இளம்பெண் ஒருத்தர், கொலை செய்யப்பட்ட விவகாரத்துல, கணவரை 'அரெஸ்ட்' பண்ணாங்க. அந்த பெண், கொலையாகறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான், குடும்ப பிரச்னை, பூண்டி ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கு,''

''அதோட 'சீரியஸ்னஸ்' புரிஞ்சுக்காத ஒரு 'லேடி' போலீஸ், கடமைக்கு 'செக்போஸ்ட்'டில் வச்சு விசாரிச்சு, அனுப்பிச்சிட்டாங்க. ஒருவேளை, புகாரை கரெக்ட்டா விசாரிச்சிருந்தா, அந்தப்பொண்ணு தப்பிச்சிருக்கும்னு, சொந்தக்காரங்க சொல்றாங்க...'' என்று சித்ரா சொன்னதும், காபி வரவும் சரியாக இருந்தது.ருசி கண்ட பூனைகள்


காபி குடித்து கொண்டே ''தாராபுரத்துல இருக்கற ஒற்றர்படை போலீஸ் மேடம், சரியான தகவலை, பெரிய ஆபீசர்கிட்ட சொல்றது இல்லையாம். அவங்க, இதுக்கு முன்னாடி வேல பார்த்த பழநியில, சொந்த 'பிசினஸ்' பார்க்குறதுல தான் அதிக நேரம் செலவழிக்கிறார்ன்னு புகார் கிளம்ப, ஸ்டேஷன் டியூட்டிக்கு மாத்தியிருக்காங்க,''

''மீண்டும், அவங்க பழைய இடத்துக்கே வந்துட்டாங்க. உட்கார்ந்த இடத்துல இருந்துகிட்டே, மொபைல்போன் மூலமா தகவலை சேகரிச்சு, பெரிய ஆபீசர் கவனத்துக்கு கொண்டு போயிடறாங்களாம்...'' என்றாள் மித்ரா.

''கொஞ்சம் நாளைக்கு முன்னாடி, மாவட்டம் முழுக்க, போலீஸ்காரங்களை 'டிரான்ஸ்பர்' பண்ணாங்க. இதுல, பாதி பேரு, 'டிரான்ஸ்பர்' போட்ட இடத்துக்கு போயிட்டாங்களாம். மீதி பாதி பேர், பழைய ஸ்டேஷன்லேயே இருக்காங்களாம்.,'' என்றாள் சித்ரா.

''ஆமாங்க்கா, நான் கூட கேள்விப்பட்டேன். தீபாவளி வருதுல்ல. ஒரு ரவுண்ட் கலெக்ஷன் முடிச்சுட்டுதான் கிளம்புவாங்க போல இருக்கு,'' சிரித்தாள் மித்ரா.விழித்த அதிகாரிகள்...


''மாவட்டத்துல, வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான கூட்டம், போன மாசம், நடந்துச்சு. கூட்டம் மூலமா, எந்தவொரு ஆக்கப்பூர்வ வேலையும் நடக்கலையாம். ஆனா, போன வாரம், கண்காணிப்பு அலுவலர், ஆய்வுக்கு வந்துட்டு போனதுக்கு அப்புறம் தான், அதிகாரிங்க சுறுசுறுப்பாகி இருக்காங்க,''

''அதிலும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானதாக இல்லைன்னு, அந்த அதிகாரி சொல்லிட்டாராம். இதனால, தாலுகா அளவுல கூட்டம் போட்டு, பாதிப்பை எதிர்கொள்ள தயாராகிட்டு வர்றாங்களாம்...'' சொன்ன சித்ரா, பணம் கொடுத்து விட்டு வெளியே வந்து, வண்டியை ஸ்டார்ட் செய்யவும், பில்லியனில் உட்கார்ந்து கொண்டாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X