ஒரு போன் போதுமே...

Added : அக் 12, 2021
Share
Advertisement
ரோடு படுமோசம்குளத்துப்பாளையம், எஸ்.பெரியாயிபாளையம் செல்லும் ரோடு மேடு பள்ளமாக மோசமான நிலையில் உள்ளது. ரோடு போடும் பணி பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன்குமார், குளத்துப்பாளையம்.சேவூர், முதலிபாளையம் ரோடு, ஆங்காங்கே குழியும் மேடுமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.-
 ஒரு போன் போதுமே...

ரோடு படுமோசம்
குளத்துப்பாளையம், எஸ்.பெரியாயிபாளையம் செல்லும் ரோடு மேடு பள்ளமாக மோசமான நிலையில் உள்ளது. ரோடு போடும் பணி பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன்குமார், குளத்துப்பாளையம்.சேவூர், முதலிபாளையம் ரோடு, ஆங்காங்கே குழியும் மேடுமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.- ராமசாமி, முதலிபாளையம்.கும்மிருட்டுமுதலிபாளையம், அனுபவ் குடியிருப்பு பகுதியில் தெருவிளக்குகள் இதுவரை அமைக்கப்படவில்லை. பலமுறை புகார் அளித்தும் பயனில்லை. சமூக விரோத செயல்கள் அதிகரித்துவிட்டன.- கோகுல்பாபு, முதலிபாளையம்.

திருப்பூர், தாராபுரம் ரோடு, வெள்ளியங்காடு, ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தெருவிளக்கு பல மாதங்களாக எரிவதில்லை. புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர்.- முத்துக்குமரன். வெள்ளியங்காடு.முகம் சுழிப்புகரைப்புதுார் ஊராட்சியில், மின் கட்டணம் செலுத்த சென்றால், 'நெட்' கோளாறு என நுகர்வோர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.'ஆன்லைனில்' பணம் கட்ட தெரியாத முதியவர்களிடம், அலுவலர்கள் முகம்சுழிக்கும் வகையில் பதிலளிக்கின்றனர்.- பழனிசாமி, சென்னிமலைபாளையம்.குடிநீர் தட்டுப்பாடுதிருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு ராமையா காலனி, மெயின் ரோடு பகுதியில், குடிநீர் சரிவர வினியோகிக்கப்படுவதில்லை. குடிநீர் வந்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டது.- மகாலட்சுமி, ராமையா காலனி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X