20.59 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தியாச்சு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

20.59 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தியாச்சு!

Added : அக் 12, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதை கடந்த, 12.38 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. போதிய அளவில் தடுப்பூசி இருப்பு இருப்பதால், தொடர்ந்து முகாம்களை நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 20 லட்சத்து, 59 ஆயிரத்து, 112 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் தவணை தடுப்பூசியை, 15 லட்சத்து, 91 ஆயிரத்து, 032 பேருக்கும்,

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதை கடந்த, 12.38 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. போதிய அளவில் தடுப்பூசி இருப்பு இருப்பதால், தொடர்ந்து முகாம்களை நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 20 லட்சத்து, 59 ஆயிரத்து, 112 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் தவணை தடுப்பூசியை, 15 லட்சத்து, 91 ஆயிரத்து, 032 பேருக்கும், இரண்டாம் தவணை நான்கு லட்சத்து, 64 ஆயிரத்து, 80 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில், 18 வயதை கடந்த, 12 லட்சத்து, 38 ஆயிரத்து, 126 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். குறைந்த பட்சமாக, 60 வயதை கடந்த இரண்டு லட்சத்து, 84 ஆயிரத்து, 547 பேரும், 45 வயதை கடந்த ஐந்து லட்சத்து, 32 ஆயிரத்து, 439 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.முன்வந்து பெண்கள் தடுப்பூசி செலுத்தும் விகிதம் சற்று குறைவாக உள்ளது. நேற்று முன்தின நிலவரப்படி மாவட்டத்தில், ஒன்பது லட்சத்து, 82 ஆயிரத்து, 644 பெண்களுக்கும், பத்து லட்சத்து, 72 ஆயிரத்து, 127 ஆண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கோவேக் ஷின் செலுத்தியவர்களில் பலர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கால இடைவெளி அதிகம் என்பதால், மெசேஜ் சரி வர வந்து சேராததால், கோவிஷீல்டு செலுத்தியவர் இரண்டாம் தவணை இன்னும் செலுத்தாமல் உள்ளனர்.கால இடைவெளி அதிகம் என்பதால், மெசேஜ் சரி வர வந்து சேராததால்,கோவிஷீல்டு செலுத்தியவர் இரண்டாம் தவணை இன்னும் செலுத்தாமல் உள்ளனர்.இருப்பில் தடுப்பூசி...

சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், ''ஐந்து மெகா சிறப்பு முகாம் உதவியால், மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி, 80 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசியை, 20 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். மாவட்டத்தில் போதிய அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், நகர்நல மையங்களில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்,'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X