அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

தமிழ்நாடு

அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர் ஆர்ப்பாட்டம்

Added : அக் 12, 2021
Share
மீஞ்சூர் : நிலுவை தொகை வழங்கக்கோரி, வடசென்னை அனல் மின் நிலைய சிறு ஒப்பந்ததாரர்கள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வடசென்னை அனல் மின் நிலையங்களில், சிறு ஒப்பந்ததாரர்கள் மூலம், 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.எட்டு மாதங்களாக ஒப்பந்ததாரர்கள் செய்து முடித்த பணிகளுக்கான பணம் வழங்கப்படவில்லை எனவும், நிலுவையில் உள்ள தொகையை வழங்க

மீஞ்சூர் : நிலுவை தொகை வழங்கக்கோரி, வடசென்னை அனல் மின் நிலைய சிறு ஒப்பந்ததாரர்கள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வடசென்னை அனல் மின் நிலையங்களில், சிறு ஒப்பந்ததாரர்கள் மூலம், 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.எட்டு மாதங்களாக ஒப்பந்ததாரர்கள் செய்து முடித்த பணிகளுக்கான பணம் வழங்கப்படவில்லை எனவும், நிலுவையில் உள்ள தொகையை வழங்க வலியுறுத்தியும், நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வடசென்னை அனல் மின் நிலைய நுழைவு வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ஏழு மாதங்களாக தொழிலாளர்களுக்கு தங்களிடம் இருந்த பணத்தை கொண்டு ஊதியம் வழங்கிய நிலையில், தற்போது ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரும் காலத்தில், ஊதியம் வழங்க முடியாத நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.மேலும், மத்திய தொகுப்பில் இருந்து, அனல் மின் நிலையத்திற்கு, 4,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையினை அனல் மின் நிலைய நிர்வாகம் உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X