பொது செய்தி

தமிழ்நாடு

உ.பி., மாநிலத்துக்கு செல்லும் செங்கை ஓட்டுப்பதிவு இயந்திரம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : உத்தர பிரதேச மாநில தேர்தலுக்காக செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து 1,250 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.வட மாநிலமான உ.பி.யில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுவதாகவும், தமிழகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்குமாறும், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.சென்னை,
 உ.பி., மாநிலத்துக்கு செல்லும் செங்கை ஓட்டுப்பதிவு இயந்திரம்

செங்கல்பட்டு : உத்தர பிரதேச மாநில தேர்தலுக்காக செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து 1,250 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

வட மாநிலமான உ.பி.யில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுவதாகவும், தமிழகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்குமாறும், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில், ஓர் அறையில் வைக்கப்பட்டிருந்த கூடுதலாக உள்ள 1,250 ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, அனைத்து கட்சியினர் முன்னிலையில், கலெக்டர் ராகுல்நாத் திறக்க உத்தரவிட்டார்.இதையடுத்து வருவாய் துறையினர் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை 'ஸ்கேன்' செய்து, புதிய ஓட்டுப்பதிவுக்கு ஏற்ப தயார் நிலையில் வைத்துஉள்ளனர். இவற்றை, உ.பி., மாநிலத்திற்கு, வாகனத்தில் வைத்துஇரண்டு நாட்களில் அனுப்பஉள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X