உருக்காலையால் பாதிப்பு; பொதுமக்கள் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உருக்காலையால் பாதிப்பு; பொதுமக்கள் முற்றுகை

Added : அக் 12, 2021
Share
பல்லடம்:தாராபுரம் வட்டம் சங்கராண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள இரும்பு உருக்கு ஆலையால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், ஆலையின் அனுமதியை ரத்து செய்யக்கோரி, நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:சங்கராண்டம்பாளையம் கிராமத்தை சுற்றியுள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 50
 உருக்காலையால்  பாதிப்பு; பொதுமக்கள் முற்றுகை

பல்லடம்:தாராபுரம் வட்டம் சங்கராண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள இரும்பு உருக்கு ஆலையால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், ஆலையின் அனுமதியை ரத்து செய்யக்கோரி, நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:சங்கராண்டம்பாளையம் கிராமத்தை சுற்றியுள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை, கோழி, மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு உள்ளிட்ட தொழில்கள் நடந்து வருகின்றன.இங்குள்ள இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்களால், தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. கருத்துக்கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த பின்னும் ஆலை அமைக்க முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆலை செயல்பட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. மக்கள் அமைதியை கெடுக்கும் ஆலை அமைக்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் வனஜா உறுதியளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X