சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி - திருவள்ளூர்

Added : அக் 12, 2021
Share
Advertisement
வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது.ஒதப்பை கிராமத்தில், ஒரு வளைவில் வேன் கவிழ்ந்தது. இதில், 20 - 55 வயதுடைய ஆறு பேர் காயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும், '108' ஆம்புலன்ஸ் சேவை மூலம் சிகிச்சைக்காக,

வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்
ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது.


ஒதப்பை கிராமத்தில், ஒரு வளைவில் வேன் கவிழ்ந்தது. இதில், 20 - 55 வயதுடைய ஆறு பேர் காயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும், '108' ஆம்புலன்ஸ் சேவை மூலம் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.மின்னல் தாக்கி பசு, முதியவர் பலிதிருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த தத்தலுார் பகுதியில், நேற்று மாலை, மின்னல், இடியுடன் கன மழை பெய்தது. அப்போது, கோபால் மகன் பலராமன், 55, வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்த பசுவை, கொட்டகைக்கு கொண்டு வர முயன்றார். அப்போது, மின்னல் தாக்கி பசு இறந்தது.


பலராமன், மின்னலால் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறிய நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.மூதாட்டியிடம் செயின் பறிப்புகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பாண்டவப் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் யசோதா, 62. கணவர் இறந்து விட்டார்.

தனிமையில் வசித்து வந்த அவர், நேற்று முன்தினம் காலை, ரேஷன் கடைக்குச் சென்றார். கடை பூட்டி இருந்ததால், மதியம் செல்லலாம் என, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்ற இரு மர்ம நபர்கள், மூதாட்டி அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்து அங்கிருந்து தப்பினர். சிவ காஞ்சி போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.ரயிலில் அடிபட்டு முதியவர் பலிவாலாஜாபாத்: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம் வரையில் செல்லும் மின்சார ரயில் நேற்று மாலை, வாலாஜாபாத் ரயில் நிலையத்தைக் கடந்தது.

கிதிரிப்பேட்டை - நத்தப்பேட்டை இடையே, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், தண்டவாளத்தை கடந்து உள்ளார்.அப்போது, மின்சார ரயிலில் அடிபட்டு, முதியவர் இறந்தார். முதியவர் குறித்து, விலாசம் தெரியாததால், ரயில்வே போலீசார் உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X