3 நாள் தேடுதல் பணி: இறந்தவர் சடலம் மீட்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 நாள் தேடுதல் பணி: இறந்தவர் சடலம் மீட்பு

Added : அக் 12, 2021
Share
பல்லடம்:மூன்று நாள் தேடுதல் வேட்டையில், கிணற்றில் தவறி விழுந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி, தேவராயன் பாளையத்தை சேர்ந்த ராமன் மகன் சுந்தரம், 42, மற்றும் சகுந்தலா, 37. கிணற்றில் தவறி விழுந்த சகுந்தலாவை காப்பாற்றச் சென்ற சுந்தரமும் கிணற்றுக்குள் விழுந்தார். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தில் அண்ணன் - தங்கை இருவரும்
 3 நாள் தேடுதல் பணி: இறந்தவர் சடலம் மீட்பு

பல்லடம்:மூன்று நாள் தேடுதல் வேட்டையில், கிணற்றில் தவறி விழுந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி, தேவராயன் பாளையத்தை சேர்ந்த ராமன் மகன் சுந்தரம், 42, மற்றும் சகுந்தலா, 37. கிணற்றில் தவறி விழுந்த சகுந்தலாவை காப்பாற்றச் சென்ற சுந்தரமும் கிணற்றுக்குள் விழுந்தார். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தில் அண்ணன் - தங்கை இருவரும் உயிரிழந்தனர்.சகுந்தலாவின் உடலை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள், சுந்தரத்தின் உடலை தேடும் பணியில் இரண்டு நாட்களாக ஈடுபட்டிருந்தனர். உடல் கிடைக்காத நிலையில் தண்ணீரை வெளியே இறைக்க திட்டமிடப்பட்டது.நேற்று முன்தினம் இரவு மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டது. இதற்கிடையே, நேற்று காலை உடல் தண்ணீரில் மிதந்ததால், தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X