சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு தொழிலாளி பலி; மனைவிக்கு நிவாரணம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு, இ.எஸ்.ஐ., சார்பில், நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.'கோவிட் - 19' நிவாரண திட்டத்தின் கீழ், இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்த தொழிலாளர், கொரோனாவால் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் 90 சதவீத சரசாசரி ஊதியம் வழங்கப்படுகிறது.திருப்பூர் ரிதம் நிட் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்த குப்புசாமி, 65,

திருப்பூர்:திருப்பூரில் கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு, இ.எஸ்.ஐ., சார்பில், நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.'கோவிட் - 19' நிவாரண திட்டத்தின் கீழ், இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்த தொழிலாளர், கொரோனாவால் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் 90 சதவீத சரசாசரி ஊதியம் வழங்கப்படுகிறது.திருப்பூர் ரிதம் நிட் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்த குப்புசாமி, 65, கொரோனா தொற்று பாதித்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இவர், கடந்த ஜூன் 8ல் உயிரிழந்தார்.தொற்று கண்டறியப்பட்ட தேதியில், குப்புசாமி, இ.எஸ்.ஐ., ல் பதிவு செய்த தொழிலாளர்.இதனால், குப்புசாமியின் குடும்பத்தினருக்கு, கொரோனா நிவாரணம் வழங்க, இ.எஸ்.ஐ., கோவை சார் மண்டல அலுவலக துணை இயக்குனர் உத்தரவிட்டார்.திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கிளை மேலாளர் திலீப், குப்புசாமியின் மனைவி தவமணிக்கு, சான்றோர் அடையாள அட்டை, இறுதி சடங்குக்கு, 15 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.''மாதாந்திர உதவித்தொகை, நாளொன்றுக்கு 241 ரூபாய் வீதம் வாழ்நாள் முழுவதும் தவமணியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்,'' என, கிளை மேலாளர் திலீப் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X