பொது செய்தி

தமிழ்நாடு

இன்று ஓட்டு எண்ணிக்கையில் கலவர அபாயம் 'முதலீடு' செய்த வேட்பாளர்கள் 'குஸ்தி'க்கு தயார்; பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு எண்ணிக்கை 13 ஒன்றியங்களில் இன்று நடக்கிறது. ஓட்டு எண்ணும் மையங்களில் போதிய பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு உள்ளதாக, தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். பல லட்சம் ரூபாய் செலவு செய்து, வெற்றி பெறுவோமா, மாட்டோமா என, இதன் முடிவை எதிர்பார்த்து, வேட்பாளர்கள் திக்... திக்...
இன்று ஓட்டு எண்ணிக்கையில் கலவர அபாயம் 'முதலீடு'  செய்த வேட்பாளர்கள்  'குஸ்தி'க்கு தயார்; பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிப்பு


காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு எண்ணிக்கை 13 ஒன்றியங்களில் இன்று நடக்கிறது.

ஓட்டு எண்ணும் மையங்களில் போதிய பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு உள்ளதாக, தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். பல லட்சம் ரூபாய் செலவு செய்து, வெற்றி பெறுவோமா, மாட்டோமா என, இதன் முடிவை எதிர்பார்த்து, வேட்பாளர்கள் திக்... திக்... மனநிலையில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐந்து ஒன்றியங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தின் எட்டு ஒன்றியங்களுக்கும், ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 6, 9ம் தேதிகளில் நடந்தது.இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்ட ஓட்டுப்பதிவில் 86.4 சதவீதமும், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் 72.33 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின.செங்கல்பட்டு மாவட்டத்தில் முதற்கட்ட தேர்தலில் 66.71 சதவீதமும், இரண்டாம் கட்ட தேர்தலில் 75.51 சதவீத ஓட்டுகளும் பதிவாகின.காலை 8:00 மணிகாஞ்சியின் ஐந்து ஒன்றியங்களிலும், 11 மாவட்ட கவுன்சிலர், 98 ஒன்றிய கவுன்சிலர், 269 ஊராட்சி தலைவர், 1,793 வார்டு உறுப்பினர் என 2,171 பதவிகளுக்கு, 7,036 பேர் போட்டியிட்டனர்.ஓட்டுப்பதிவுக்காக மாவட்ட அளவில் 1,281 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.காஞ்சிபுரம் எஸ்.பி., சுதாகர் தலைமையில், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு துணை காவல் கண்காணிப்பாளர்கள், 14 காவல் ஆய்வாளர்கள், 560 போலீசார் மற்றும் அதிரடிப்படையினர், போக்குவரத்து காவலர்கள் என பலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஏழு ஓட்டு எண்ணும் மையங்களில், 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கட்சியினர் இடையே மோதல், அடிதடி தவிர்க்க, ஓட்டு எண்ணும் மையங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு, சென்னை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா, தேர்தல் நுண் பார்வையாளர்கள் மூலம், ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.மன நிலைபல பதவிகளுக்கு போட்டியிடும் கட்சியினர், தினமும் சரக்கு, பிரியாணி, தினப்படி 'பேட்டா' கொடுத்து, தங்கள் ஆதரவாளர்களை வைத்து பிரசாரம் செய்தனர். பலரும் ஓட்டுக்கு காசு, பரிசு பொருட்கள் வழங்கி, வெற்றியை உறுதிப்படுத்தி வந்தனர்.

பல லட்சம் ரூபாய் செலவழித்து போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள், வெற்றி பெறுவோமா, தோற்போமா என திக்... திக்... மன நிலையில் உள்ளனர். மேலும் வெற்றி பெறும் வேட்பாளர்கள், தோற்று போவோரை கிண்டல் செய்வது உள்ளிட்ட காரணங்களால் அடிதடி, மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதால் பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.மையம் எப்படி இயங்கும்?சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதால், 14 அல்லது 16 மேஜைகள் அமைக்கப்பட்டு, இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை விரைவாகவும், எளிமையாகவும் எண்ணுவர்.

ஆனால் உள்ளாட்சி தேர்தல், ஓட்டுச்சீட்டு முறையில் நடைபெற்றதால், ஒவ்வோர் ஓட்டுச் சீட்டையும் எடுத்து, பிரித்து, முடிவு அறிவிக்கப்பட உள்ளது.இன்று நடக்கும் ஓட்டு எண்ணும் பணி நடக்கும் மையங்களை இரண்டாக பிரித்துள்ளனர். ஓட்டு எண்ணும் பணி துவங்கியவுடன், 'ஸ்ட்ராங்' ரூமில் உள்ள ஓட்டுப்பெட்டிகளை வரிசையாக தரைதளத்திற்கு எடுத்து வந்து, அவற்றை வேட்பாளரின் முகவர்கள் முன்னிலையில் பிரிப்பர். ஓட்டுச்சாவடியின் முதன்மை அலுவலர் கொடுத்த '17சி' படிவத்தில் குறிப்பிட்ட ஓட்டு எண்ணிக்கையும், பெட்டியில் உள்ள ஓட்டுச் சீட்டின் எண்ணிக்கையும் சரியாக உள்ளதா என சரிபார்ப்பர். மேலும், ஓட்டுப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள 'சீல்' உடையாமல் உள்ளதா என முகவர்கள் கண்காணிப்பர்.அடையாள அட்டை வழங்கல்செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஓட்டு எண்ணும் அறைகளையும், 747 கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக கண்காணித்து கொண்டிருக்கிறோம்.

சட்டசபை, லோக்சபா தேர்தலின்போது, எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும், தற்போது எடுக்கப்பட்டுஉள்ளன.ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் துவங்கி, மாவட்ட கவுன்சிலர் வரை, நான்கு பதவிகளுக்கும் போட்டியிடுவோருடைய 'கவுன்டிங் ஏஜென்ட்'களுக்காக, வெவ்வேறு நிறத்தில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது; தவிர, ஊடக துறையினருக்கும் தனி அடையாளச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வோர் ஓட்டு எண்ணும் அறையிலும், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.ராகுல்நாத், செங்கல்பட்டு கலெக்டர்
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X