பொது செய்தி

தமிழ்நாடு

சினிமா பாணியில் மோசடி கோவை நபர்கள் ஐவர் கைது

Added : அக் 12, 2021
Share
Advertisement
நீலாங்கரை : சென்னை, கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள ஒரு விடுதியில், 10 பேர், வாடகைக்கு தங்கி இருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால், நேற்று விடுதி உரிமையாளர் தீபக், நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில், 10 பேரில் ஐந்து பேர், எம்.எல்.எம்., தொழில் செய்து பலரிடம் பண மோசடியில் ஈடுபடுவது தெரிந்தது. மீதமுள்ள ஐந்து பேரை, வேலைக்காக அழைத்து வந்ததால், போலீசார்

நீலாங்கரை : சென்னை, கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள ஒரு விடுதியில், 10 பேர், வாடகைக்கு தங்கி இருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால், நேற்று விடுதி உரிமையாளர் தீபக், நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், 10 பேரில் ஐந்து பேர், எம்.எல்.எம்., தொழில் செய்து பலரிடம் பண மோசடியில் ஈடுபடுவது தெரிந்தது. மீதமுள்ள ஐந்து பேரை, வேலைக்காக அழைத்து வந்ததால், போலீசார் அவர்களை அனுப்பினர்.கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார், 35, ராஜா, 37, மோகனகுமார், 45, சரவணன், 52, பாலகிருஷ்ணன், 42, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய், மூன்று லேப்டாப், ஒப்பந்த மோசடி ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் கூறியதாவது:ஜெர்மன் வங்கியில், 'இரிடியம்' இருப்பதாகவும், 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், நாளடைவில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் எனவும், ஆசை வார்த்தை கூறி மோடியில் ஈடுபட்டுள்ளனர். சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில், பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. தமிழகம் முழுதும், 2009ம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான மக்களை சேர்த்து, 18 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தனர். ஐந்து பேர் மீது, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X