புற்றுநோய் பாதித்த பெண்ணின் கடைசி விருப்பம் நிறைவேற்றம்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சிங்கப்பூர்-இறக்கும் நிலையில் இருந்த புற்றுநோயாளி பெண்ணின் கடைசி ஆசையை சிங்கப்பூர் மருத்துவர்கள் குழு, நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, கணவர் ராஜகோபாலுடன் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசித்து வந்தார்.ராஜேஸ்வரிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. நோய் முற்றியதை அடுத்து, திருச்சியில் உள்ள உறவினர்களிடம் வளரும்,

சிங்கப்பூர்-இறக்கும் நிலையில் இருந்த புற்றுநோயாளி பெண்ணின் கடைசி ஆசையை சிங்கப்பூர் மருத்துவர்கள் குழு, நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, கணவர் ராஜகோபாலுடன் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசித்து வந்தார்.



latest tamil news


ராஜேஸ்வரிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. நோய் முற்றியதை அடுத்து, திருச்சியில் உள்ள உறவினர்களிடம் வளரும், தன் 12 மற்றும் 9 வயது மகன்களை காண விரும்பினார் ராஜேஸ்வரி. கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தியாவுக்கு சில விமானங்களே இயக்கப்பட்டு வந்த நிலையில், ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வந்த டன் டாக் செங் மருத்துவமனை, வெளியுறவு துறை அமைச்சகங்களிடம் பேசி, அவரை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது. எனினும் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்தான், அவருக்கு அனுமதி கிடைத்தது


latest tamil news


இது குறித்து, ராஜேஸ்வரியின் கணவர் ராஜகோபாலன் கூறியதாவது:கடைசி நேரத்தில் அனுமதி கிடைத்ததால் விமானத்தில் எங்களுக்கு இடமில்லை. சக பயணியர் மனது வைத்ததால் எங்களுக்கு இடம் கிடைத்தது. இந்தியா வந்து மகன்களை பார்த்த சந்தோஷத்தில், இரு வாரங்களில் என் மனைவி இறந்து விட்டார். மகன்களை நேரில் பார்க்காமல் என் உயிர் போகாது என அவர் கூறியதை நிறைவேற்றி விட்டார். அதற்கு உதவிய டன் டாக் செங் மருத்துவமனைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் விமானத்தில் எங்களுக்கு இடமில்லை. சக பயணியர் மனது வைத்ததால் எங்களுக்கு இடம் கிடைத்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வீட்டுக் கொடுத்த அந்த சக பயணியர்களுக்கு நன்றி கூறுவோம் ஆம் அவர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாமல்லவா? அதுவே மனித நேயம் காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிதென்றார் வள்ளுவர்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
12-அக்-202115:27:26 IST Report Abuse
Vena Suna அடடா.பாவம்.தாயை போன்ற தெய்வம் இல்லை.
Rate this:
Cancel
Ganesan Swaminathan - Dhaka,வங்கதேசம்
12-அக்-202111:35:46 IST Report Abuse
Ganesan Swaminathan ஆழ்ந்த இரங்கல்கள் / அனுதாபங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X