பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்த பண்டிகைகளால் அலைமோதும் மக்கள் கூட்டம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
ஆயுத பூஜை, தீபாவளி என, அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கி வருவதால், சென்னை தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.அதே சமயம், பாண்டி பஜாரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 40 கோடி ரூபாய் செலவில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், தி.நகரில் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கிறது.போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, சாலையோர

ஆயுத பூஜை, தீபாவளி என, அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கி வருவதால், சென்னை தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அதே சமயம், பாண்டி பஜாரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 40 கோடி ரூபாய் செலவில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், தி.நகரில் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கிறது.போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, பன்னடுக்கு வாகன நிறுத்தத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

'லிப்ட்'சென்னையின், மிகப்பெரிய வணிக பகுதியான தி.நகரில், மக்கள் கூட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.குறிப்பாக, ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, தியாகராய சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில், ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க, பொதுமக்கள் கூடுவது வழக்கம். இதனால், இப்பகுதியில் இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் காணப்படும். இருசக்கர வாகனங்களில் வரும் நடுத்தர மக்கள், நான்கு சக்கர வாகனங்களில் வரும் மேல்தட்டு மக்கள், பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தி, கடை வீதிகளுக்கு வரும் பொதுமக்கள் என, தி.நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி எப்போதும் மக்கள் கூட்டம், வாகன நெரிசலுடன் காணப்படும்.

இப்பகுதியில் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பாண்டிபாஜர் பகுதி, 40.79 கோடி ரூபாய் செலவில், உலக தரத்தில் மேம்படுத்தப்பட்டது. சாலையின் இருபுறமும், 10 மீட்டர் அளவுக்கு நடைபாதைகள், அங்காங்கே, அமரும் வகையில் இருக்கைகள், சுவர் ஓவியங்கள் போன்றவை அமைக்கப்பட்டன.தி.நகர் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்காக, தியாகராய சாலை - தணிகாசலம் சாலை சந்திப்பில், 522 மீட்டர் பரப்பளவில், 500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 200 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், 'லிபட்' வசதியுடன் கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது.
ஸ்தம்பிப்பு
இந்த வாகன நிறுத்தம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், சாலையோர வாகன நிறுத்தத்திற்கு, சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியது.அதன்படி, மாநகர் முழுதும், 110 இடங்களில், 4,000 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலான சாலையோர வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், பாண்டிபஜாரின், தியாகராய சாலையும் ஒன்றாக உள்ளது. அதனால், தி.நகர் மற்றும் பாண்டி பஜார் வருவோர், அடுக்குமாடி வாகன நிறுத்தத்திற்கு பதிலாக, தியாகராய சாலையில் உள்ள, சாலையோர வாகன நிறுத்தத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.இதனால், அச்சாலை முழுதும், நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. மேலும், சாலையோர நிறுத்தத்தில், நான்கு சக்கர வாகனத்தை நிறுத்த காத்திருந்தால், அச்சாலை முழுதும் அடைத்து, பின்னால் வரும் வாகனங்களும் வரிசைக்கட்டி நிற்க வேண்டி உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே, இப்பகுதி உலக தரத்தில் புதுப்பிக்கப்பட்டு, இருவழிப்பாதை, ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. அவ்வாறு மாற்றப்பட்டும்,

அச்சாலையில், போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கிறது. இதை தவிர, உட்புற சாலைகளில், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், தி.நகர் முழுவதும், பிரதான சாலைகள் மட்டுமின்றி, உட்புற சாலைகளிலும் போக்குவரத்து பாதிப்பு உள்ளது.தவிர்ப்பு;போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே கட்டப்பட்ட பன்னடுக்கு வாகன நிறுத்தம் முழுமையாக பயன்படுத்தப்படாததும், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவது அதிகரித்துள்ளதாலுமே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாத நிலை நீடிக்கிறது. அதே போல், தி.நகர், பாண்டிபஜார் பகுதிகளில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து பல்வேறு சிறு வணிகர்கள் கடை விரித்துள்ளனர்.

ஆட்டோக்கள் நிறுத்த அனுமதியில்லாத பகுதிகளில், அத்துமீறி நுழையும் ஆட்டோக்கள், வாடிக்கையாளர் வருகையை எதிர்பார்த்து ஆங்காங்கே நிறுத்தப்படுவதும், போக்கு வரத்து நெரிசலுக்கு பிரதான காரணமாக உள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், பண்டிகைகளுக்காக, பொதுமக்கள் புத்தாடை வாங்க தி.நகர் நோக்கி படையெடுத்துஉள்ளனர்.

இந்த நிலையில், தி.நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், போக்குவரத்து ஸ்தம்பிக்காத வகையில், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக, வழக்கமான நடைமுறை இல்லாமல், வணிகர்களுடன் ஆலோசித்து மாற்று திட்டத்தை செயல்படுத்தவும், அதிகாரிகள் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தியாகராய சாலை - தணிகாசலம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மாநகராட்சியினர் மேற்கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், சாலையோரங்களில் விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்.  தியாகராய சாலை அடுக்குமாடி வாகன நிறுத்தம் மற்றும் ஜி.என்.செட்டி, வெங்கட நாராயண சாலைகளின் ஓரங்களில் வாகன நிறுத்தம் அமைத்து, அங்கிருந்து, உஸ்மான் சாலை, ரங்கநாதன் சாலைகளுக்கு செல்வதற்காக, மினி பேருந்துகளை அரசு இயக்க வேண்டும்.

அடுக்கு மாடி வாகன நிறுத்ததிற்கு அருகில், 'ஸ்மார்ட் சைக்கிள் ஷேரிங்' திட்டத்தில், சைக்கிள் மற்றும் இ - பைக் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன், பயன்படுத்தவும் ஊக்குவிக்க வேண்டும். முக்கிய வணிக சாலைகளில், வாகனங்கள் இறக்கி விட்டு செல்வதற்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். உட்புற சாலைகளிலோ, பிரதான சாலைகளிலோ வாகனங்களை நிறுத்தினால், பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். தி.நகரில் பல்வேறு சாலையோரங்களில் உள்ள, நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை ஒழுங்குபடுத்தி சீர்படுத்த வேண்டும். பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை இணைந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X