பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைதீர் கூட்டம் - விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், சிறுபுழல்பேட்டை பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:கும்மிடிப்பூண்டி வட்டம், சிறுபுழல்பேட்டை கிராமத்தில், ஆறு கம்பெனிகள் விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம், கருத்து கேட்பு கட்டம் நடத்தியும், சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்த கம்பெனிகள் வந்தால், இப்பகுதி
 மக்கள் குறைதீர் கூட்டம் - விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், சிறுபுழல்பேட்டை பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:கும்மிடிப்பூண்டி வட்டம், சிறுபுழல்பேட்டை கிராமத்தில், ஆறு கம்பெனிகள் விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.

இதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம், கருத்து கேட்பு கட்டம் நடத்தியும், சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்த கம்பெனிகள் வந்தால், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, கம்பெனி விரிவாக்கத்தினை தடை செய்ய உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.மனை பட்டா வேண்டும் திருத்தணி வட்டம், களாம்பாக்கம் கிராம பொதுமக்கள், திருவள்ளூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:எங்கள் கிராமத்தில், நுாறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு, வீட்டு மனை பட்டா கோரி, 2018ல், வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை. இந்த நிலையில், கடந்த, அக்.1ம் தேதி, திருத்தணி ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தோம். அவர், எங்கள் கிராமத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றார். இருப்பினும், எங்களுக்கு, பட்டா கிடைக்கில்லை. எனவே, எங்களுக்கு, வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.சலவை தொழிலாளர்கள் மனுதிருத்தணி சலவை தொழிலாளர் சங்கத்தினர், திருவள்ளூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

திருத்தணி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சலவை துறை, பணி முடிக்காமல் பாதில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால், பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். அரசு சார்பில், இலவச சலவை பெட்டி, வீட்டுமனை பட்டா, குடியிருக்க வீடு கட்டித்தர வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X