பொது செய்தி

இந்தியா

ஆப்கன், பாக்., சரக்கு: கையாள அதானி துறைமுகம் மறுப்பு

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி-'நவ., 15 முதல் ஈரான், ஆப்கன், பாக்., ஆகிய நாடுகளின் சரக்கு பெட்டகங்களை கையாள முடியாது' என, அதானி துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த மாதம், குஜராத், முந்த்ரா துறைமுகத்திற்கு வந்திறங்கிய சரக்கு பெட்டகங்களில் இருந்து, 3,000 கிலோ ஹெராயின் போதை மருந்தை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். பெரிய பிளாஸ்டிக் பைகளில் முகத்திற்கு பூசும் பவுடர் என குறிப்பிட்டு,

புதுடில்லி-'நவ., 15 முதல் ஈரான், ஆப்கன், பாக்., ஆகிய நாடுகளின் சரக்கு பெட்டகங்களை கையாள முடியாது' என, அதானி துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது.



latest tamil news


கடந்த மாதம், குஜராத், முந்த்ரா துறைமுகத்திற்கு வந்திறங்கிய சரக்கு பெட்டகங்களில் இருந்து, 3,000 கிலோ ஹெராயின் போதை மருந்தை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். பெரிய பிளாஸ்டிக் பைகளில் முகத்திற்கு பூசும் பவுடர் என குறிப்பிட்டு, போதை மருந்து கடத்தப்பட்டுஉள்ளது.

இந்த கடத்தல் தொடர்பாக நாடு முழுதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ஆப்கன், உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் முந்த்ரா துறைமுகத்தை, அதானி துறைமுக நிறுவனம் நிர்வகித்து வருகிறது. எனவே, போதைப் பொருள் பறிமுதல் சம்பவத்தைத் தொடர்ந்து அதானி துறைமுக நிறுவனம், முந்த்ரா துறைமுகம் உட்பட, அதன் பராமரிப்பில் உள்ள துறைமுகங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


latest tamil news


அதன்படி, 'நவ., 15 முதல் ஈரான், ஆப்கன், பாக்., நாடுகளில் இருந்து வரும் சரக்கு பெட்டகங்களை கையாளப் போவதில்லை' என, அதானி துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடை எத்தனை காலம் அமலில் இருக்கும் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-202110:38:34 IST Report Abuse
அப்புசாமி இவிங்க மேலே தப்பு வராதபடி மத்திய அரசும், மத்திய அரசு மேலே தப்பு வராதபடி இவிங்களும் பாத்துப்பாங்க. கடைசியில் இருக்கவே இருக்காரு எங்க நேரு.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
12-அக்-202110:37:02 IST Report Abuse
பாமரன் கீழே புருஷ் எழுதியது தான் உண்மை.. இந்தியாவின் பன்னாட்டு வர்த்தகம் சர்வதேச ஒப்பந்தங்களை ஒட்டி நடப்பது... இதில் ஒரு துறைமுக நிர்வாகத்தின் பங்கு ஒன்றுமில்லை... இந்த மாதிரி பாலிஸி முடிவுகள் அரசு மட்டுமே எடுக்க முடியும்... (அதானி சொன்னால் அரசு செய்யப்போகுதுன்னு சொல்றீங்களா...🤔 அதுவும் சரிதான்..) நடந்த கடத்தலை கண்டுபிடித்தது முழுக்க முழுக்க மத்திய அரசின் துறைகள் தான்.👏. துறைமுக நிர்வாகம் அதிகபட்சமாக கடத்தலுக்கு உதவ முடியும் அவ்ளோதான்... அதை செய்தார்களான்னு விசாரணை நடக்குதான்னு ஒரு தகவலும் இல்லை... 🙄 ஆல்ரெடி இந்த கடத்தல் மேட்டர் சுருதி குறைய ஆரம்பிச்சாச்சு... பாகப்பிரிவினை...ஸாரி விசாரணை முடிஞ்சிருக்குமோ...🤔
Rate this:
Soumya - Trichy,இந்தியா
12-அக்-202113:39:48 IST Report Abuse
Soumyaமல வாயிலில் தங்கம் கடத்துறனவெல்லாம் கருத்து சொல்லுறா ஹீஹீஹீ...
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
12-அக்-202110:34:52 IST Report Abuse
sahayadhas என்னதுஅதானி துறைமுகமா? கல்கத்தா துறைமுகத்தை அம்பானி துறை மாக மாற்ற என்னமா மம்தாவிற்கு குடசைல் குடுத்தீங்கடா கேடுகெட்ட தேசதுரோகிகளா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X