ஆப்கன், பாக்., சரக்கு: கையாள அதானி துறைமுகம் மறுப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆப்கன், பாக்., சரக்கு: கையாள அதானி துறைமுகம் மறுப்பு

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (9)
Share
புதுடில்லி-'நவ., 15 முதல் ஈரான், ஆப்கன், பாக்., ஆகிய நாடுகளின் சரக்கு பெட்டகங்களை கையாள முடியாது' என, அதானி துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த மாதம், குஜராத், முந்த்ரா துறைமுகத்திற்கு வந்திறங்கிய சரக்கு பெட்டகங்களில் இருந்து, 3,000 கிலோ ஹெராயின் போதை மருந்தை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். பெரிய பிளாஸ்டிக் பைகளில் முகத்திற்கு பூசும் பவுடர் என குறிப்பிட்டு,

புதுடில்லி-'நவ., 15 முதல் ஈரான், ஆப்கன், பாக்., ஆகிய நாடுகளின் சரக்கு பெட்டகங்களை கையாள முடியாது' என, அதானி துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது.



latest tamil news


கடந்த மாதம், குஜராத், முந்த்ரா துறைமுகத்திற்கு வந்திறங்கிய சரக்கு பெட்டகங்களில் இருந்து, 3,000 கிலோ ஹெராயின் போதை மருந்தை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். பெரிய பிளாஸ்டிக் பைகளில் முகத்திற்கு பூசும் பவுடர் என குறிப்பிட்டு, போதை மருந்து கடத்தப்பட்டுஉள்ளது.

இந்த கடத்தல் தொடர்பாக நாடு முழுதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ஆப்கன், உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் முந்த்ரா துறைமுகத்தை, அதானி துறைமுக நிறுவனம் நிர்வகித்து வருகிறது. எனவே, போதைப் பொருள் பறிமுதல் சம்பவத்தைத் தொடர்ந்து அதானி துறைமுக நிறுவனம், முந்த்ரா துறைமுகம் உட்பட, அதன் பராமரிப்பில் உள்ள துறைமுகங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


latest tamil news


அதன்படி, 'நவ., 15 முதல் ஈரான், ஆப்கன், பாக்., நாடுகளில் இருந்து வரும் சரக்கு பெட்டகங்களை கையாளப் போவதில்லை' என, அதானி துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடை எத்தனை காலம் அமலில் இருக்கும் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X