கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பணி வயது வரம்பு எதிரான வழக்கு தள்ளுபடி

Added : அக் 12, 2021
Share
Advertisement
மதுரை-முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணய அடிப்படையில், டி.ஆர்.பி.,வெளியிட்ட தேர்வு அறிவிப்பிற்கு தடை கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மாற்றம் செய்ததுபுதுக்கோட்டை மாவட்டம் காதகுறிச்சியைச் சேர்ந்த தவமணி, தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த மனு: முதுகலை பட்டதாரி ஆசிரியர்

மதுரை-முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணய அடிப்படையில், டி.ஆர்.பி.,வெளியிட்ட தேர்வு அறிவிப்பிற்கு தடை கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மாற்றம் செய்ததுபுதுக்கோட்டை மாவட்டம் காதகுறிச்சியைச் சேர்ந்த தவமணி, தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த மனு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்குரிய தகுதிகளை பெற்றுள்ளோம். ஆசிரியர் பணி நியமன நடைமுறைகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது.இதை பொதுப் பிரிவினருக்கு 40 வயது, ஆதிதிராவிடர்களுக்கு 45 வயதாக நிர்ணயித்து மேல்நிலைக்கல்வி பணி விதிகளில் 2020ல் தமிழக அரசு மாற்றம் செய்தது.கடந்த 2012 முதல் 2020 வரை முதுகலை ஆசிரியர் பணிக்கு சில தேர்வுகளே நடந்தன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் -டி.ஆர்.பி., செப்., 9 ல் அறிவிப்பு வெளியிட்டது. அக்.,17 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு நவ.,13 முதல் 15 வரை நடைபெறும். பங்கேற்க வயது வரம்பு 40 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நாங்கள் 45 வயதை கடந்து விட்டோம். வயது வரம்பு குறைப்பால் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு வயது வரம்பு 57. ஆனால் பள்ளிக் கல்வியில் ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்து வெவ்வேறு அளவுகோல் பின்பற்றப்படுகிறது. இது பாகுபடுத்தும் வகையில் உள்ளது.தடை விதிக்க வேண்டும்தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயித்து டி.ஆர்.பி.,வெளியிட்ட அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். எங்கள் விண்ணப்பத்தை ஏற்று, தேர்வில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர், 'இதுபோன்ற வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இம்மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X