தமிழ்நாடு

மரக்கழிவிலிருந்து எரிபொருள் தயாரிப்பு கொடுங்கையூர் குப்பை கிடங்கு அசத்தல்

Added : அக் 12, 2021
Share
Advertisement
கொடுங்கையூர் : கொடுங்கையூர் குப்பை கிடங்கில், மரக்கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, முதல் எட்டு மண்டலங்களில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் 2,500 டன் குப்பை கொட்டப்படுகிறது.மலை போல் குவிந்துள்ள குப்பை கழிவுகளால், அப்பகுதிகளில் காற்று மாசு மற்றும்
 மரக்கழிவிலிருந்து  எரிபொருள்  தயாரிப்பு  கொடுங்கையூர்  குப்பை  கிடங்கு  அசத்தல்

கொடுங்கையூர் : கொடுங்கையூர் குப்பை கிடங்கில், மரக்கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, முதல் எட்டு மண்டலங்களில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் 2,500 டன் குப்பை கொட்டப்படுகிறது.மலை போல் குவிந்துள்ள குப்பை கழிவுகளால், அப்பகுதிகளில் காற்று மாசு மற்றும் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்போருக்கு சுவாச பிரச்னையுடன், புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இதைத் தவிர்க்க, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல்வேறு திட்டங்களை மாநகராட்சி அறிமுகப்படுத்தி வருகிறது.எட்டு மண்டலங்களில் இருந்து கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு, தினமும் 300 டன் மரக் கழிவுகள் வருகின்றன.இந்த மரக்கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் பணிகளை, சென்னை மாநகராட்சி, தனியார் நிறுவனத்துடன் இணைந்து செய்து வருகிறது.இதற்கென கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், 400 டன் திறன் கொண்ட மறுபயன்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.மரங்கள், கிளைகள், மரக்கழிவுகளை இங்குள்ள அரைக்கும் இயந்திரத்தில் கொட்டுகின்றனர். மரக்கழிவுகள் ராட்சத இயந்திரம் மூலம் அரைக்கப்பட்டு மரத்துாளாக மாற்றப்படுகின்றன.

இதன் மூலம் தினமும், 10 டன் மரத்துாள் தயாரிக்கப்படுகிறது. மற்றொரு இயந்திரத்தில் மரத்துாள் கொட்டப்படுகிறது. அதில் மரத்துாள் அழுத்தப்பட்டு, நிலக்கரி போன்ற எரிபொருளாக தயாரிக்கப்படுகிறது.இந்த மரத்துாள் எரிபொருளை, பெரிய நிறுவனங்கள் வாங்கிச் செல்கின்றன. 1 டன் மர எரிபொருள், 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.மர எரிபொருளை, பெரிய அளவிலான சலவை ஆலைகள், ஓட்டல்கள், செங்கல் சூளைக்கு விற்பனை செய்வதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X