பொது செய்தி

தமிழ்நாடு

குமரியில் கொட்டி தீர்த்தது மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
நாகர்கோவில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பகல் முழுதும் கொட்டி தீர்த்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.குமரி மாவட்டத்தில் நேற்று காலை 10:00 மணி முதல் விடாது பெய்த மழையால் கோட்டார், அவ்வை சண்முகம் ரோடு, கல்லுாரி ரோடுகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவு வெள்ளம் பெருக்கெடுத்தது. இரணியலில் 7 செ.மீ., மழை
 குமரியில் கொட்டி தீர்த்தது மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகர்கோவில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பகல் முழுதும் கொட்டி தீர்த்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.குமரி மாவட்டத்தில் நேற்று காலை 10:00 மணி முதல் விடாது பெய்த மழையால் கோட்டார், அவ்வை சண்முகம் ரோடு, கல்லுாரி ரோடுகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவு வெள்ளம் பெருக்கெடுத்தது. இரணியலில் 7 செ.மீ., மழை பதிவானது.உபரி நீர் வெளியேற்றம்தொடர் மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழை நீடிப்பதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையில் 43.89 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் 1,338 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கோதையாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுகிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு கம்பிகளையும் தாண்டி தண்ணீர் பாய்கிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை மலைப்பாதையில் உள்ள பர்லியார் கே.என்.ஆர்., மரம் வேரோடு சாய்ந்ததுடன், மண் சரிவும் ஏற்பட்டது.மீண்டும் போக்குவரத்துதேசிய நெடுஞ்சாலை துறை, தீயணைப்பு துறையினர் சென்று பொக்லைன் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி மண் சரிவை சீரமைத்தனர்

. இதனால், மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. அதேபோல, குன்னுார் அருகே உள்ள வெலிங்டன் பேரக்ஸ் செல்லும் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால் மக்கள் செல்ல பாதிப்பு ஏற்பட்டது. நகராட்சி ஊழியர்கள் 'பொக்லைன்' மூலம் மண் அகற்றி சீர்படுத்தினர். நிவாரண தொகைபேரட்டி பாரத் நகரில், மூர்த்தி என்பவரின் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. ஆய்வு செய்த ஊராட்சி மற்றும் வருவாய் துறையினர் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.

வருவாய் அதிகாரிகள் கூறுகையில், 'குன்னுார் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், பேரிடர் பாதிப்புள்ள பகுதி களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X