பொது செய்தி

தமிழ்நாடு

இணைப்பு சாலையில் வடிகால் வருமா?

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருவொற்றியூர், : அம்பேத்கர் நகர் - சரஸ்வதி நகர் இணைப்பு சாலையில், வடிகால் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை திருவொற்றியூர் மேற்கு, அம்பேத்கர் நகர் - சரஸ்வதி நகரை இணைக்கும் வகையில் சாலை உள்ளது. இச்சாலையை தினசரி ௧௦௦க்கணக்கான வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இச்சாலை குண்டும் குழியுமாக, பயன்பாட்டிற்கு

திருவொற்றியூர், : அம்பேத்கர் நகர் - சரஸ்வதி நகர் இணைப்பு சாலையில், வடிகால் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் மேற்கு, அம்பேத்கர் நகர் - சரஸ்வதி நகரை இணைக்கும் வகையில் சாலை உள்ளது. இச்சாலையை தினசரி ௧௦௦க்கணக்கான வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இச்சாலை குண்டும் குழியுமாக, பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

லேசான மழைக்கே, சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி, பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு, கழிவு நீர் கலப்பும் உள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, அம்பேத்கர் நகர் - சரஸ்வதி நகர் இணைப்பு சாலைக்கு, தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். தவிர, மழை நீர் தேங்காத வண்ணம் வடிகால் அமைத்துக் கொடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X