பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்கள் இயக்கத்தில் கடும் சரிவு ஏன்? இழப்பில் மீளாத உரிமையாளர்கள் புலம்பல்

Added : அக் 12, 2021
Share
Advertisement
சேலம்-''தமிழகத்தில், ஆம்னி பஸ்களின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள கடும் சரிவுக்கு, பெரிய நிறுவனங்கள் கொரோனா கால இழப்பில் இருந்து இன்னும் மீளாததே காரணம்,'' என, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறினார். கொரோனாஅவர் மேலும் கூறியதாவது:கொரோனாவுக்கு முன் வரை, தமிழக அரசின் அனுமதி பெற்ற 1,650 பஸ்கள், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய,

சேலம்-''தமிழகத்தில், ஆம்னி பஸ்களின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள கடும் சரிவுக்கு, பெரிய நிறுவனங்கள் கொரோனா கால இழப்பில் இருந்து இன்னும் மீளாததே காரணம்,'' என, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறினார்.

கொரோனா

அவர் மேலும் கூறியதாவது:கொரோனாவுக்கு முன் வரை, தமிழக அரசின் அனுமதி பெற்ற 1,650 பஸ்கள், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய, மாநிலங்களின் அனுமதி பெற்ற, 2,350 என மொத்தம், 4,000 ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயங்கின. கொரோனா பரவலால், 2020 ஏப்., 25 முதல் ஆம்னி பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு விலக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு அக்., 16 முதல், 600 பஸ்கள் மட்டுமே இயங்கின.நடப்பாண்டில், மே முதல் மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக குறைந்த அளவில் இயங்கிய ஆம்னி பஸ்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

இதனால், இரண்டு லட்சம் தொழிலாளர்கள், 600 ஆம்னி பஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம், 16 மாதங்களாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில், 4,000 பஸ்களுக்கு உரிமையாளர்கள் வங்கிகள், நிதி நிறுவனங்களிடம், 1,000 கோடி ரூபாய் கடனாக பெற்று இருந்தோம். தவணை தொகைஇதில், 3,000 பஸ்களுக்கு 16 மாதங்களாக தவணை தொகை கட்ட முடியவில்லை. கடந்த, 16 மாதங்களாக தவணை திருப்பி செலுத்தாததால், வட்டி அதிகரித்து பஸ்சின் மொத்த விலையை தாண்டி விட்டது.

இதனால், 100 பஸ்களுக்கு மேல் வைத்துள்ள பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் தற்போது தொழிலுக்கு வரவில்லை. அவர்கள் மவுனமாக உள்ளனர். தற்போது, 1,200 ஆம்னி பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன.கடந்த காலங்களில் சரஸ்வதி பூஜை, தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே முன்பதிவு முடிந்து விடும். தற்போது முன்பதிவு, 40 சதவீதத்தை கூட தாண்டாமல் உள்ளது. எனவே இயக்கத்தில் உள்ள ஆம்னி பஸ்களையும் தொடர்ந்து இயக்க முடியாத நிலைக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X