சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்தி்கள்

Added : அக் 12, 2021
Share
Advertisement
ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முசிறி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்திவேல், 14; ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் கமலேஷ், 11; ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இருவரும், அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நேற்று முன்தினம் மாலை, நாவல் பழம் பறிக்க சென்றனர். இரவாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முசிறி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்திவேல், 14; ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் கமலேஷ், 11; ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இருவரும், அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நேற்று முன்தினம் மாலை, நாவல் பழம் பறிக்க சென்றனர். இரவாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை சிவசக்திவேல் உடல் ஏரியில் கரை ஒதுங்கி கிடந்தது. இதையடுத்து கமலேஷை தீயணைப்பு வீரர்கள், கிராம மக்கள் ஏரி முழுதும் தேடி, மதியம் அவரது உடலை மீட்டனர்.

தீ குளிக்க முயன்ற தந்தை

தர்மபுரி: தர்மபுரியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 70; இவரது மனைவி ஜெயந்தி மூன்றாண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தம்பதிக்கு மூன்று மகன்கள். இதில் சக்திகுமரன் என்பவர் விஜயகுமாரின் தாய் ராதா அம்மாளை ஏமாற்றி செந்தில் நகரில் உள்ள வீட்டை தன் பெயரில் மாற்றம் செய்துள்ளார். மேலும், தந்தை விஜயகுமாரின் பெயரிலுள்ள சொத்தையும் அபகரித்துள்ளார். இது குறித்து விஜயகுமார், மாவட்ட நிர்வாகம், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை மீட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அவரை அனுப்பி வைத்தனர்.

ஹிந்தியில் பேசி பிரசாரம்

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 1,220 'டோஸ்' ஒதுக்கப்பட்டதில், 1,317 பேர் செலுத்திக் கொண்டனர். 'ஹிந்தி தெரிந்த நபர் மூலம், வட மாநில தொழிலாளர்களுக்கு புரியும் வகையில், 'தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், செலுத்தி கொள்ள வேண்டும்' என்பது போன்ற விழிப்புணர்வு, ஹிந்தி மொழியில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது நல்ல பலன் கொடுத்தது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருவியில் குளித்தவர் பலி

கொடைக்கானல்: ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தை சேர்ந்தவர் அருண்குமார், 24. இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வந்தார். பேத்துப்பாறை பகுதியில் ஓராருவி அருவியில் குளிக்கச் சென்றனர். அங்கு அருண்குமார் அருவி தடாக சுழலில் சிக்கி இறந்தார். அருண்குமார் உடலை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X