சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : அக் 12, 2021
Share
Advertisement
ஓடும் பஸ்சில் குதித்தவர் பலிஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்தவர் கேத்ரா நாயக், 22. நேற்று, திருப்பூர் - பல்லடம் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினார். பல்லடம் அடுத்த குன்னாங்கல்பாளையம் பிரிவு அருகே பஸ் வரும்போது, ஓடும் பஸ்சில் இருந்து இறங்க முயன்ற போது, கீழே விழுந்து படுகாயமடைந்தார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார். வாலிபர் குறித்த

ஓடும் பஸ்சில் குதித்தவர் பலிஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்தவர் கேத்ரா நாயக், 22. நேற்று, திருப்பூர் - பல்லடம் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினார். பல்லடம் அடுத்த குன்னாங்கல்பாளையம் பிரிவு அருகே பஸ் வரும்போது, ஓடும் பஸ்சில் இருந்து இறங்க முயன்ற போது, கீழே விழுந்து படுகாயமடைந்தார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார். வாலிபர் குறித்த விவரங்களை பல்லடம் போலீசார் சேகரித்து வருகின்றனர்.பணம் பறிப்பு: இருவர் கைதுபெருமாநல்லுார், தட்டான் குட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, 27. இவர் நேற்று முன்தினம் தட்டான் குட்டை அருகே நடந்து சென்றபோது, மூன்று பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, கார்திக்கிடமிருந்து ஆயிரம் ரூபாய், மொபைல் போன்,ஏ.டி.எம். கார்டு, ஆகியவற்றை பறித்து சென்றது.பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, தட்டான்குட்டையை சேர்ந்த தர்மராஜ், 40, வினோத்குமார், 25, ஆகிய இருவரை கைது செய்து, தலைமறைவான ஜீவாவை தேடி வருகின்றனர்.விபத்தில் வாலிபர் பலிதிருப்பூர், விஜயாபுரம், அங்காளம்மன் முதல் வீதியை சேர்ந்தவர் சுந்தர், 31; வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை டூவீலரில் காங்கயம் ரோட்டில் சென்ற போது, மற்றொரு டூவீலரை முந்த முயற்சி செய்தார். அதில், சுந்தர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் உள்ள மையத்தடுப்பில் மோதியதில், இறந்தார். மற்றொரு டூவீலரில் வந்த சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.இறந்தவர் யார்; போலீசார் விசாரணைஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷன் அருகே, தண்டவாளத்தில் நேற்று, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிரேதம் கிடந்தது. அவர், நீல நிற டி-சர்ட் மற்றும் அடர் நீல நிற பர்முடாஸ் அணிந்திருந்தார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. அவர் யார்; எந்த ஊரைச்சேர்ந்தவர் என்கிற விவரங்கள் தெரியவில்லை. திருப்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.லாட்டரி சீட்டு விற்றவர் கைதுகுன்னத்துாரை அடுத்த வெள்ளிரவெளி பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குன்னத்துார் போலீசார், அப்பகுதிக்கு சென்று லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வெள்ளிரவெளி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம், 55, என்பவரை கைது செய்து, கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X