சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கீழக்கரை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய மீன்கள் 

Added : அக் 12, 2021
Share
Advertisement
கீழக்கரை--கீழக்கரையில் நேற்று கடலில் மீன்கள் இறந்து ஒதுங்கியது.செப்., அக்., மாதங்களில் நுண்ணிய ஆல்கல்புளூம் வகை பாசிகள் காலநிலை மாற்றத்தால் அதிகளவு பெருக்கெடுக்கும். இதனால் பகலில் பசுமையாகவும், இரவு நேரங்களில் ஒளிரும் தன்மை கொண்ட ஊதா கலரிலும் கடல் பகுதி காணப்படும்.நேற்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள்,

கீழக்கரை--கீழக்கரையில் நேற்று கடலில் மீன்கள் இறந்து ஒதுங்கியது.செப்., அக்., மாதங்களில் நுண்ணிய ஆல்கல்புளூம் வகை பாசிகள் காலநிலை மாற்றத்தால் அதிகளவு பெருக்கெடுக்கும். இதனால் பகலில் பசுமையாகவும், இரவு நேரங்களில் ஒளிரும் தன்மை கொண்ட ஊதா கலரிலும் கடல் பகுதி காணப்படும்.நேற்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.கடல் மீன் ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள் கூறியதாவது; பாம்பன் முதல் கீழக்கரை வரையிலான கடல் பகுதியில் பலத்த காற்று, நீரோட்டம், அலைகள் இல்லாததால், கடல்நீரின் வெப்பநிலை உயர்ந்துள்ளது. கடலில் மிதந்து செல்ல முடியாமல் குறிப்பிட்ட பகுதிகளில் கடல் பாசி தேங்கியுள்ளது. அதனை சாப்பிட்ட மீன்களின் செதில்களில் அடைபட்டதால், சுவாசிக்க இயலாமல் திணறி உயிரிழந்துள்ளது. ஓரா, கிளிமீன், கிளிஞ்சான் உள்ளிட்ட மீன்களுடன் கடல் அட்டை, கடல் பல்லி, கடல் குதிரை உள்ளிட்டவைகளும் இறந்து ஒதுங்கியுள்ளன, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X