சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தப்பிய கைதிகள் சிக்கினர் 3 போலீசார் சஸ்பெண்ட்

Added : அக் 12, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்--ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன் கோவிலில் தப்பிய இரு கைதிகள் பிடிபட்ட நிலையில், மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கூமாபட்டி போலீசார் அக்.9 ல் வாகன சோதனையில் ஈடுபட்டபோது , ராமசாமியாபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் 24, அருண்குமார் 19, வாளுடன் கைதாகினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அருப்புக்கோட்டை

ஸ்ரீவில்லிபுத்துார்--ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன் கோவிலில் தப்பிய இரு கைதிகள் பிடிபட்ட நிலையில், மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கூமாபட்டி போலீசார் அக்.9 ல் வாகன சோதனையில் ஈடுபட்டபோது , ராமசாமியாபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் 24, அருண்குமார் 19, வாளுடன் கைதாகினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அருப்புக்கோட்டை கிளை சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டனர்.வழியில் கிருஷ்ணன்கோவிலில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு புறப்படும்போது இருவரும் தப்பினர். 80 க்கு மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில் மறுநாள் மாலை முத்துகுமார் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தப்பிய அருண்குமாரை நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கைது செய்தனர். இருவர் மீதும் மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் பணியின் போது கவனக்குறைவாக இருந்ததாக கூமாபட்டி ஏட்டு கனகராஜ், போலீசார் விஜயகுமார், ஈஸ்வரனை, விருதுநகர் எஸ்.பி., மனோகரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X