சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நூல் முகவர் கடத்தல் :இருவரிடம் விசாரணை

Added : அக் 12, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:நுால் முகவர் கடத்திய வழக்கில், இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர், போயம்பாளையம் அருகேயுள்ள அவிநாசி நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 62; நுால் விற்பனை முகவர். தனியார் நுாற்பாலையில் நுால் வாங்கிய வகையில் 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டியிருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை செல்வராஜை தேடி காரில் வந்த ஒரு

அனுப்பர்பாளையம்:நுால் முகவர் கடத்திய வழக்கில், இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர், போயம்பாளையம் அருகேயுள்ள அவிநாசி நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 62; நுால் விற்பனை முகவர். தனியார் நுாற்பாலையில் நுால் வாங்கிய வகையில் 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டியிருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை செல்வராஜை தேடி காரில் வந்த ஒரு கும்பல் அவரது வீட்டுக்கு சென்று அவரிடம் பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டு, அவரை அந்த கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளது. செல்வராஜின் மகன் குருபிரசாத், 24, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தி சென்ற கும்பலை தேடி வந்தனர். அதில், கடத்தல் தொடர்பாக கணபதிபாளையத்தை சேர்ந்த செந்தில் பிரபு, கோவையை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X