காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மலை போல் குவியும் குப்பை

Added : அக் 12, 2021
Share
Advertisement
காசிமேடு : காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மலை போல் குவிந்துள்ள குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 2,000 விசைப்படகுகள், 7,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலை மேற்கொள்கின்றனர். தினமும், 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது.காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் அருகே, விசைப்படகு கட்டும்

காசிமேடு : காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மலை போல் குவிந்துள்ள குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 2,000 விசைப்படகுகள், 7,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலை மேற்கொள்கின்றனர். தினமும், 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது.காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் அருகே, விசைப்படகு கட்டும் தளம் உள்ளது. இந்த தளத்தை சுற்றி உடைந்த படகுகள், குப்பை, பிளாஸ்டிக், மரத்துண்டுகள் உள்ளிட்ட கழிவுகள் மலை போல குவிந்துள்ளன. பராமரிப்பின்றி மோசமான நிலையில் இப்பகுதி காட்சியளிக்கிறது.

அத்துடன் கடும் துர்நாற்றமும் வீசுகிறது.குப்பையால், இப்பகுதியில் அடிக்கடி தீ விபத்துகளும் நடந்து வருகின்றன. எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன், இப்பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X