சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கொலையா?

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்-'வரதட்சணை கொடுமையால், எங்கள் மகளை கொலை செய்து, துாக்கில் தொங்க விட்டுள்ளனர்,' என திருப்பூரை சேர்ந்த பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.திருப்பூர், நெசவாளர் காலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை, 47; பனியன் வியாபாரி. மனைவி மீனாட்சி. இவரதுமகள் இலக்கியா, 27. பி.டெக்., முடித்துள்ளார்.கடந்த 2020 மே 27ல், இலக்கியாவுக்கும், கோவை,சிவானந்தபுரத்தை சேர்ந்த சரவணன் - ஜெயந்தி தம்பதி

திருப்பூர்-'வரதட்சணை கொடுமையால், எங்கள் மகளை கொலை செய்து, துாக்கில் தொங்க விட்டுள்ளனர்,' என திருப்பூரை சேர்ந்த பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர், நெசவாளர் காலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை, 47; பனியன் வியாபாரி. மனைவி மீனாட்சி. இவரதுமகள் இலக்கியா, 27. பி.டெக்., முடித்துள்ளார்.கடந்த 2020 மே 27ல், இலக்கியாவுக்கும், கோவை,சிவானந்தபுரத்தை சேர்ந்த சரவணன் - ஜெயந்தி தம்பதி மகன் ராம்பிரகாஷ், 28 என்பவருக்கும் திருமணம் நடந்தது. ராம்பிரகாஷ், மாடலிங் போட்டோகிராபர்.

திருமணத்துக்கு பின், கோவை, ராமநாதபுரத்தில் தம்பதி வசித்து வந்தனர். கடந்த 9 ல் வீட்டில் இலக்கியா தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்தனர். இதனால், 'சந்தேக மரணம்' என வழக்கு பதிந்து, ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: இலக்கியாவின் திருமணத்தின் போது 100 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கியுள்ளனர். இதன் பின், 6 கிலோ வெள்ளியும், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரும் வாங்கி கொடுத்தனர்.ராம்பிரகாஷ் பிறந்தநாளையொட்டி, சமீபத்தில்1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'டூ - வீலர்' வாங்கிகொடுத்தனர்.

இருப்பினும், மீண்டும் பணம் கேட்டு மாப்பிள்ளை விட்டார் பிரச்னை செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இலக்கியாவின் தந்தை அண்ணாதுரை கூறும்போது, ''இலக்கியா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. அடித்து, கொலை செய்து, துாக்கில் தொங்க விட்டிருப்பார்கள். துாக்கு கயிற்றில் ஏராளமான முடிச்சுகள் உள்ளன. ''இதையெல்லாம் பார்க்கும் போது, சந்தேகம் வருகிறது. உரிய விசாரணை நடத்தி, ராம்பிரகாஷ் மற்றும் அவரின் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X