சம்பவம் செய்தி

தமிழ்நாடு

280 கிலோ கஞ்சா கடத்தல்; கோர்ட்டில் நால்வர் சரண்

Added : அக் 12, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்-நாகை துறைமுகத்தில் இருந்து, இலங்கைக்கு கடல் வழியாக 280 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தேடப்பட்ட நான்கு பேர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நாகப்பட்டினத்தில் இருந்து, இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக, செப்., 27ம் தேதி கிடைத்த தகவல்படி சுங்கத் துறை அதிகாரிகள், கீச்சாங்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான எட்டு

தஞ்சாவூர்-நாகை துறைமுகத்தில் இருந்து, இலங்கைக்கு கடல் வழியாக 280 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தேடப்பட்ட நான்கு பேர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

நாகப்பட்டினத்தில் இருந்து, இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக, செப்., 27ம் தேதி கிடைத்த தகவல்படி சுங்கத் துறை அதிகாரிகள், கீச்சாங்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான எட்டு பேர், மீன்பிடி பைபர் படகில், பெரிய அளவிலான பொட்டலங்களை, ஐஸ் பெட்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை சுங்கத் துறை அதிகாரிகள் பிடிக்க முயன்ற போது, நான்கு பேர் கடலில் குதித்தும், மற்ற நான்கு பேர் வாகனம் மூலமும் தப்பியோடினர்.

அதிகாரிகள் படகை சோதனை செய்தபோது, 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடியவர்களை சுங்கத் துறை அதிகாரிகள் தேடி வந்தனர். தஞ்சாவூர் இன்றியமையாத பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் முன்னிலையில், தேடப்பட்ட எட்டு பேரில் நான்கு பேர் நேற்று சரணடைந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, நான்கு பேரையும் வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். கஞ்சா கடத்திய வழக்கில், தேடப்பட்ட நான்கு பேர்நேற்று தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X