சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொசு மருந்து குடித்த 3 வயது குழந்தை பலி

Added : அக் 12, 2021
Share
Advertisement
பல்லாவரம் : கொசு மருந்து குடித்த, ௩ வயது குழந்தை இறந்தது. உடலை பிரேத பரிசோதனை செய்ய, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பல்லாவரம் அடுத்த பம்மல், பாத்திமா நகர், வெள்ளைச்சாமி தெருவைச் சேர்ந்தவர், தமிழரசன்.இவரது மனைவி அருள்மொழி. தம்பதிக்கு, ௩ வயதில், கிஷோர் என்ற மகன் இருந்தான்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் வைத்து
 கொசு மருந்து குடித்த 3 வயது குழந்தை பலி

பல்லாவரம் : கொசு மருந்து குடித்த, ௩ வயது குழந்தை இறந்தது. உடலை பிரேத பரிசோதனை செய்ய, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல்லாவரம் அடுத்த பம்மல், பாத்திமா நகர், வெள்ளைச்சாமி தெருவைச் சேர்ந்தவர், தமிழரசன்.இவரது மனைவி அருள்மொழி. தம்பதிக்கு, ௩ வயதில், கிஷோர் என்ற மகன் இருந்தான்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் வைத்து இருந்த கொசு மருந்தை, சிறுவன் கிஷோர் எடுத்து குடித்துள்ளான்.

இதை கண்ட பெற்றோர்,அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர். மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவன்கொண்டு செல்லப்பட்டான். அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான்.

தொடர்ந்து, சிறுவனின் உடலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்து கொள்வதாக கூறி, அவனது, உறவினர்கள் காரில் கொண்டு வந்தனர்.'எழும்பூர் மருத்துவமனையில் குழந்தை இறந்ததால், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இங்கு, பிரேத பரிசோதனை செய்ய முடியாது' என, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், சிறுவனின் உறவினர்கள் திடீரென மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். பல்லாவரம் போலீசார் வந்து, அவர்களிடம் பேசினர்.தொடர்ந்து, 'சிறுவனின் உடல், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின், வழங்கப்படும், பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும்' எனக்கூறி, மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X