சாலையில் திரியும் மாடுகளால் பீதி

Added : அக் 12, 2021
Share
Advertisement
மணலி : மணலி புதுநகர் உட்புற சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பக்தர்கள் மிரளுகின்றனர்.சென்னை மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், புரட்டாசி மாத பத்து நாள் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் பங்கேற்க, சென்னை சுற்றுவட்டாரத்தில் இருந்து தினசரி பக்தர்கள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, தினந்தோறும் இரவில் பல்வேறு வாகனங்களில் அய்யா பதிவலம் வரும் காட்சியை

மணலி : மணலி புதுநகர் உட்புற சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பக்தர்கள் மிரளுகின்றனர்.

சென்னை மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், புரட்டாசி மாத பத்து நாள் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் பங்கேற்க, சென்னை சுற்றுவட்டாரத்தில் இருந்து தினசரி பக்தர்கள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, தினந்தோறும் இரவில் பல்வேறு வாகனங்களில் அய்யா பதிவலம் வரும் காட்சியை காண, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து செல்வர்.

இந்நிலையில், கோவிலை ஒட்டிய உட்புற சாலையில், மாடுகள் சுற்றித் திரிகின்றன. சில இடங்களில், அவ்வப்போது, தெருவிளக்குகள் எரியாமல் கும்மிருட்டாக இருப்பதால், மாடுகள் படுத்திருப்பது தெரியவில்லை.

இதனால், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும், திடீரென மாடுகளைப் பார்த்து மிரண்டு போகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு, கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.மீறினால், மாடுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X