சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு பெட்டிகள் சீல் உடைப்பு? தேர்தல் அலுவலர் 'சஸ்பெண்ட்'

Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாணியம்பாடி-ஆலங்காயத்தில், ஓட்டு பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து தேர்தல் அலுவலர், மூன்று போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில், 27 ஊராட்சி தலைவர்கள், 237 வார்டு உறுப்பினர்கள், 18 ஒன்றிய குழு உறுப்பினர், இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த, 9ல் நடந்தது.
 ஓட்டு பெட்டிகள் சீல் உடைப்பு? தேர்தல் அலுவலர் 'சஸ்பெண்ட்'

வாணியம்பாடி-ஆலங்காயத்தில், ஓட்டு பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து தேர்தல் அலுவலர், மூன்று போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில், 27 ஊராட்சி தலைவர்கள், 237 வார்டு உறுப்பினர்கள், 18 ஒன்றிய குழு உறுப்பினர், இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த, 9ல் நடந்தது. பதிவான ஓட்டு பெட்டிகள்ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டது.

அங்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.ஜோலார்பேட்டை, தி.மு.க., - எம்.எல்.ஏ., தேவராஜ் நேற்று முன்தினம் ஓட்டு பெட்டிகள் வைத்திருந்த பள்ளிக்கு வந்து சென்றதாகவும், அதன் பின் சில பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.திருப்பத்துார் கலெக்டர் அமர் குஷ்வாஹா, நேற்று பள்ளிக்கு வந்து அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தார்.

பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''ஆலங்காயம் ஓட்டு எண்ணும் மையத்திற்கு, விதிகளை மீறி சென்றவர்கள் மீது விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்யப்படும். தேர்தல் அலுவலர் சிவக்குமார், பாதுகாப்பு பணியில் இருந்த மூன்று போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
12-அக்-202104:28:27 IST Report Abuse
M  Ramachandran விடியல் மலர்ந்து விட்டது. விட்ட குறை தொட்ட குறை. திருகட்சியின் லீலைகள் ஆரம்பம். இவர்கள் மற்ற காட்சிகள் ஆட்சியில் யிருக்கும்போது குதியோ குதி என்று குதிப்பார்கள். இப்போ கப்சிப்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X