பொது செய்தி

தமிழ்நாடு

அறிவுப்பசி போக்க நூலகம் தேவை: வாசகர்கள் வட்டம் எதிர்பார்ப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை எஸ்டேட் பகுதிகளில், பகுதிநேர நுாலகம் திறக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகராட்சியில், மொத்தம், 21 வார்டுகளில், 52 எஸ்டேட்டுகள் உள்ளன. வால்பாறை நகரில் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அரசு கலைக்கல்லுாரி துவங்கப்பட்டு, இங்கு, 1200 மாணவர்கள் படிக்கின்றனர்.தற்போது, தொழிலாளர்களின் குழந்தைகள்

வால்பாறை:வால்பாறை எஸ்டேட் பகுதிகளில், பகுதிநேர நுாலகம் திறக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகராட்சியில், மொத்தம், 21 வார்டுகளில், 52 எஸ்டேட்டுகள் உள்ளன. வால்பாறை நகரில் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அரசு கலைக்கல்லுாரி துவங்கப்பட்டு, இங்கு, 1200 மாணவர்கள் படிக்கின்றனர்.தற்போது, தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரும், குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற பெருமையுடன் உயர்கல்வி கற்று அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.படித்த இளைஞர்கள் அதிக அளவில் உள்ள வால்பாறை நகரில், நுாலகத்துறை சார்பில் நுாலகம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இதே போல்,அட்டகட்டி, காடம்பாறை, சோலையார்டேம் ஆகிய பகுதிகளில் நுாலகத்துறை சார்பில், பகுதி நேர நுாலகம் செயல்படுகிறது.ஆனால், பெரும்பாலான எஸ்டேட்களில் நுாலகங்கள் இல்லை. இதனால், படித்த இளைஞர்கள் பல கி.மீ., தொலைவில் இருந்து வந்து, வால்பாறை நகரில் உள்ள நுாலகத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, பல்வேறு போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள், வால்பாறை நகரில் செயல்படும் நுாலகத்தை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.இது குறித்து, வாசகர்கள் கூறுகையில், 'எஸ்டேட்களில் படித்த இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். குறிப்பாக, மக்கள் தொகை அதிகமாக காணப்படும் முடீஸ் பஜார், கருமலை பஜார், ரொட்டிக்கடை, சின்கோனா, வாட்டர்பால்ஸ் பகுதிகளில், பகுதி நேர நுாலகம் அமைக்க நுாலகத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X