பொது செய்தி

தமிழ்நாடு

ஆமை வேகத்தில் நகர்கிறது பாண்டி பஜார் காவல் நிலைய கட்டுமானம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
பாண்டி பஜார் : ஆமை வேகத்தில் நடந்து வரும் பாண்டி பஜார் காவல் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பாண்டி பஜார், தியாகராயர் சாலையில் பாண்டி பஜார் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, குற்றப்பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்கு ஆகியவை இயங்கி வந்தன.இந்த காவல் நிலையம், மிகவும் பழமையான கட்டடத்தில்

பாண்டி பஜார் : ஆமை வேகத்தில் நடந்து வரும் பாண்டி பஜார் காவல் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

பாண்டி பஜார், தியாகராயர் சாலையில் பாண்டி பஜார் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, குற்றப்பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்கு ஆகியவை இயங்கி வந்தன.இந்த காவல் நிலையம், மிகவும் பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, பழைய கட்டடத்தை இடித்து, புது கட்டடம் கட்ட, தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம் முடிவு செய்தது.

இதையடுத்து, பாண்டி பஜார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகியவை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. பின், காவல் நிலையத்தின் பின் புறம் உள்ள பகுதி முழுதுமாக இடிக்கப்பட்டது.தற்போது, சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு மட்டும் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் காவல் நிலைய கட்டுமான பணி மந்தகதியில் நடந்து வருவதால், காவலர்கள் ஓய்வு எடுக்கவும், உடை மாற்றவும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால், பாண்டி பஜார் காவல் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X