பொது செய்தி

தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ போராட்ட கால சம்பளம் மறுப்பு: ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிவகங்கை--ஜாக்டோ ஜியோ போராட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க சிவகங்கை கல்வி அதிகாரிகள் மறுப்பதாக ஆசிரியர் சங்கங்கள் தொடக்க கல்வி இயக்குனரிடம் புகார் அளித்துள்ளனர்.பழைய பென்ஷன் திட்டம் அமல் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 2019 ல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது. போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைதாகினர். துறை ரீதியான

சிவகங்கை--ஜாக்டோ ஜியோ போராட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க சிவகங்கை கல்வி அதிகாரிகள் மறுப்பதாக ஆசிரியர் சங்கங்கள் தொடக்க கல்வி இயக்குனரிடம் புகார் அளித்துள்ளனர்.

பழைய பென்ஷன் திட்டம் அமல் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 2019 ல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது. போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைதாகினர். துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. தற்போதைய அரசு போராட்ட ஆசிரியர், அரசு ஊழியர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து, போராட்ட காலத்தை பணிக்காலமாக கருதி சம்பளம் வழங்க உத்தரவிட்டது.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் சம்பளம் வழங்கி விட்டனர். ஆனால் சிவகங்கையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான 28 ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் இதுவரை சம்பளத்தை வழங்கவில்லை என ஆசிரியர் சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.

சிவகங்கையில் சம்பளம் மறுப்புஏ.ஜோசப் சேவியர், மாநிலத்தலைவர், தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி: இக்கல்வி ஆண்டில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்கவும், அரசு உத்தரவிட்டும் போராட்ட கால சம்பளத்தை வழங்க சிவகங்கை கல்வி அதிகாரிகள் மறுக்கின்றனர். கல்வி சான்றுகளின் உண்மை தன்மையை சரிபார்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடக்க கல்வி இயக்குனரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
12-அக்-202104:26:53 IST Report Abuse
Girija இந்த அமைப்பை முதலில் கலைக்கவேண்டும் . தண்ட சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X